வீடு / சமையல் குறிப்பு / வெல்லம் மாங்காய் குழம்பு

Photo of Mango Jaggery gravy by பிரசன்னா பிரசன்னா NT at BetterButter
373
0
0.0(0)
0

வெல்லம் மாங்காய் குழம்பு

Dec-11-2018
பிரசன்னா பிரசன்னா NT
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெல்லம் மாங்காய் குழம்பு செய்முறை பற்றி

எள், தேங்காய் அரைத்து வெல்லம் சேர்த்து வைத்தால் குழம்பின் சுவை அருமையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மாங்காய் 2
  2. அரை மூடி தேங்காய்
  3. எள் இரண்டு ஸ்பூன்
  4. வெல்லம் ஒரு கப்
  5. மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
  6. மஞ்சள்தூள் அரை ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. சின்ன வெங்காயம் ஒரு கப்

வழிமுறைகள்

  1. மாங்காய்யை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  2. அரை மூடி தேங்காய் மற்றும் ஊறவைத்த எள்ளை மிக்ஸி ஜாரில் போடவும்.
  3. மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  4. நன்கு மையமாக அரைத்து கொள்ளவும்.
  5. சின்ன வெங்காயம் மற்றும் வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து கடுகு,சீரகம் தாளிக்கவும்.
  7. உரித்த சின்ன வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  8. நறுக்கிய மாங்காய்யை சேர்த்து மூடி போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
  9. அரைத்த தேங்காய் விழுது மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதி விடவும்.
  10. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதி விடவும்.
  11. நன்கு கொதித்து மாங்காய் வெந்து வரும் போது பொடித்த வெல்லத்தை சேர்த்து கொதி விடவும்.
  12. வெல்லம் சேர்ந்ததும் நன்கு கொதித்து குழம்பு கெட்டி ஆகும் போது தீயை அணைக்கவும்.
  13. சுவையான மாங்காய் வெல்லம் குழம்பு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்