வீடு / சமையல் குறிப்பு / ஈரல் மிளகு கிரேவி

Photo of Liver Pepper Gravy by Sumaiya shafi at BetterButter
330
0
0.0(0)
0

ஈரல் மிளகு கிரேவி

Dec-11-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈரல் மிளகு கிரேவி செய்முறை பற்றி

ஈரல் மிளகு கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஈரல் 300 கிராம்
  2. தயிர் ஒரு டேபிள்ஸ்பூன்
  3. பட்டை இரண்டு துண்டு
  4. ஏலக்காய்-2
  5. லவங்கம் 3
  6. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. பச்சைமிளகாய்-2
  9. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  10. தேங்காய் அரை கப் அரைத்தது
  11. மிளகுத் தூள் 2 டீஸ்பூன்
  12. சீரகத்தூள் 1 டீஸ்பூன்
  13. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  14. சோம்புத்தூள் 1 டீஸ்பூன்
  15. மல்லி தூள் 1 டீஸ்பூன்
  16. உப்பு தேவைக்கேற்ப
  17. எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
  18. நெய் 2 டேபிள்ஸ்பூன்
  19. மல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஈரலை மஞ்சள் தூள் போட்டு கழுவி வைத்துக் கொள்ளவும்
  2. பின் அதை தயிர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.
  3. பின் ஒரு குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் கலந்து ஊற்றி பட்டை ,லவங்கம் ,ஏலக்காய்,கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் போடவும்.
  4. வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது அதனுடன் சேர்த்து2- 3 நிமிடம் கிளறி விடவும்.
  5. தயிர் சேர்த்த ஈரலை அதனுடன் சேர்க்கவும்
  6. பின் மிளகு தூள் ,சோம்புத் தூள் சீரகத் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள்தூள் எல்லாவற்றையும் சேர்த்து கிளறவும்.
  7. கடைசியில் தேங்காய் விழுதை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஊற்றி 3 விசில் வர விடவும்
  8. குக்கரை திறந்து சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்
  9. ஓரத்தில் எண்ணெய் விட்டதும் இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்