வீடு / சமையல் குறிப்பு / ஈரல் முந்திரி கிரேவி

Photo of Cashew Liver Semi Gravy by Sumaiya shafi at BetterButter
322
0
0.0(0)
0

ஈரல் முந்திரி கிரேவி

Dec-11-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஈரல் முந்திரி கிரேவி செய்முறை பற்றி

ஈரல் முந்திரி கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஈரல் 250 கிராம்
  2. தயிர் ஒரு டேபிள்ஸ்பூன்
  3. எண்ணெய் அல்லது நெய் 3 tablespoon
  4. பட்டை ஒரு துண்டு
  5. ஏலக்காய் 2
  6. லவங்கம் 2
  7. கறிவேப்பிலை 1
  8. பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கியது
  9. இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
  10. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  11. தக்காளி பாதி பொடியாக நறுக்கியது
  12. சிவப்பு மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
  13. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  14. மல்லி தூள் அரை டீஸ்பூன்
  15. சோம்புத்தூள் அரைடீஸ்பூன்
  16. முந்திரி-7
  17. உப்பு தேவைக்கேற்ப
  18. மல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் ஈரலை மஞ்சள் தூள் போட்டு நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்
  2. பின் அதை தயிர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்
  3. பின் ஒரு குக்கரில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம் ,ஏலக்காய், கறிவேப்பிலை,பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து தாளிக்கவும்
  4. பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  6. பின் தக்காளி அதனுடன் சேர்த்து வதக்கவும்
  7. பிறகு சிவப்பு மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்துக் கிளறி விடவும்.
  8. தயிர் சேர்த்து ஈரலை அதனுடன் சேர்த்து கிளறி விடவும்.
  9. கடைசியில் முந்திரி பேஸ்ட்யில் சிறிது தண்ணீர் கலந்து ஊற்றி 3 விசில் போடவும்.
  10. குக்கரை திறந்து சிறிது மல்லி இலை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்