வீடு / சமையல் குறிப்பு / பெப்பர் கிட்னி

Photo of Mutton Pepper Kidney by Sumaiya shafi at BetterButter
491
0
0.0(0)
0

பெப்பர் கிட்னி

Dec-11-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பெப்பர் கிட்னி செய்முறை பற்றி

பெப்பர் கிட்னி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் கிட்னி 300 கிராம்
  2. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  3. பட்டை ஒரு துண்டு
  4. ஏலக்காய்-2
  5. லவங்கம் 3
  6. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  7. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  8. கருவேப்பிலை 1
  9. பச்சைமிளகாய்-2
  10. மல்லி இலை சிறிதளவு
  11. மிளகுத் தூள் 2 டீஸ்பூன்
  12. தனியாதூள் 1 டீஸ்பூன்
  13. சோம்புத்தூள் 1/2 டீஸ்பூன்
  14. சீரகத்தூள் 1 டீஸ்பூன்
  15. தேங்காய்ப்பால் அரை கப் திக்
  16. உப்பு தேவையான அளவு
  17. எண்ணெய் மூன்று டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் கிட்னியை நன்கு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி வைத்து கொள்ளவும்
  2. பின் ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்க்கவும்
  3. அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. பின் அதில் சீரகத் தூள், சோம்பு தூள், தனியா தூள், மிளகு தூள், எல்லாவற்றையும் சேர்க்கவும்
  6. பின் அதில் கழுவி வைத்த கிட்னியை சேர்த்து நன்கு கிளறி விடவும்
  7. திக்கான தேங்காய்ப்பால் மற்றும் உப்பு அதனுடன் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வரை போட வேண்டும்
  8. சுவையான பெப்பர் கிட்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்