வீடு / சமையல் குறிப்பு / அம்மா ஸ்பெஷல் விருந்து

Photo of Amma special thali by Abinaya bala at BetterButter
0
0
0(0)
0

அம்மா ஸ்பெஷல் விருந்து

Dec-11-2018
Abinaya bala
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அம்மா ஸ்பெஷல் விருந்து செய்முறை பற்றி

என் அம்மாவுடைய சிறந்த உணவு முறைகளை மொத்தமாக சேர்த்து தொகுத்துள்ளேன்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • తమిళనాడు
 • ప్రధాన వంటకం
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. சொதி செய்ய
 2. தேங்காய்ப் பால் மூன்று கப்
 3. கேரட் உருளை பச்சை மிளகாய் தலா 2
 4. பீன்ஸ் 10
 5. முருங்கைக்காய் 1
 6. பூண்டு 10 பல்
 7. வேகவைத்த சிறு பருப்பு 1கப்
 8. எலுமிச்சம் பழம் பாதி
 9. உருளை வறுவல் செய்ய
 10. உருளைக்கிழங்கு 5
 11. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
 12. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
 13. தாளிக்க எண்ணெய் கடுகு சோம்பு கருவேப்பிலை
 14. இஞ்சி தீயல் செய்ய
 15. இஞ்சி கால் கப் துருவியது
 16. தேங்காய் பவுடர் செய்தது ஒரு கப்
 17. பூண்டு 15 பல்
 18. புளி சிறிதளவு
 19. மல்லித்தூள் ஒரு டீஸ்பூன்
 20. சீரகம் ஒரு டீஸ்பூன்
 21. தாளிக்க எண்ணை கருவேப்பிலை
 22. அடைப் பாயாசம் செய்ய
 23. அரிசி அடை ஒரு கப்
 24. பால் அரை லிட்டர்
 25. ஜவ்வரிசி அரை கப்
 26. சீனி ஒரு கப்
 27. நெய் 4 டீஸ்பூன்
 28. முந்திரி பாதாம் திராட்சை ஏலக்காய்த்தூள் சிறிதளவு
 29. வாழைத்தண்டு உருளை கட்லெட் செய்ய
 30. வாழைத்தண்டு வேகவைத்து அரைத்து ஒரு கப்
 31. உருளைக்கிழங்கு-1 வேகவைத்து மசித்து
 32. வெங்காயம் ஒன்று சிறிதாக நறுக்கியது
 33. மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன்
 34. கரம் மசாலா தூள்
 35. உப்பு கருவேப்பிலை கொத்தமல்லி தேவையான அளவு
 36. வாழைத்தண்டு சூப் செய்ய
 37. வாழைத்தண்டு வேகவைத்து அரைத்து ஒரு கப்
 38. ஃப்ரெஷ் கிரீம் ஒரு டீஸ்பூன்
 39. பூண்டு 4 பல்
 40. பச்சை மிளகாய் ஒன்று
 41. சீரகம் சிறிதளவு
 42. கருவேப்பிலை சிறிதளவு
 43. கொத்தமல்லி இலை சிறிதளவு
 44. நெய் 4 டீஸ்பூன்

வழிமுறைகள்

 1. சொதி செய்ய : முதலில் பாசிப்பருப்பை வேக வைத்து நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்
 2. சொதி செய்வதற்கு தேவையான காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
 3. மூன்றாம் தேங்காய்ப் பாலில் இந்த காய்கறிகளை உப்பு சேர்த்து வேக வைக்கவும்
 4. காய்கறிகள் வெந்தவுடன் இரண்டாம் தேங்காய்ப்பால் சேர்க்கவும்
 5. எண்ணெயில் வதக்கிய மிளகாயை இதனுடன் சேர்க்கவும்
 6. பின்னர் மசித்து வைத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு கிளறவும்
 7. நன்கு கொதி வந்த உடன் முதல் தேங்காய்ப் பாலை சேர்த்து கொதிக்க விடவும்
 8. தேங்காய்பால் 5 நிமிடம் கொதித்த பின்பு அடுப்பை அணைத்து விடவும்
 9. சோதி ஆறிய பின்பு அரை மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து விடவும்
 10. சுவையான தேங்காய்ப்பால் சொதி ரெடி
 11. உருளைக்கிழங்கு வருவல் செய்ய: உருளைக்கிழங்கை குக்கரில் நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்
 12. வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து சிறிது சிறிதாக வெட்டி உருளைக்கிழங்கு அதனுடன் சேர்த்து வதக்கவும்
 13. பின் அதனுடன் மிளகாய்த்தூள் உப்பு சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
 14. எண்ணெய் பிரிந்து வரும் வரை உருளைக்கிழங்கை நன்கு வதக்கவும்
 15. மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி
 16. வாழைத்தண்டு உருளை கட்லெட் செய்ய: முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்
 17. அதனுடன் வேக வைத்து அரைத்த வாழைத்தண்டு சேர்க்கவும்
 18. பின் கரம் மசாலா தூள் மிளகாய் தூள் வெங்காயம் கொத்தமல்லி கருவேப்பிலை உப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்
 19. இவை அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும்
 20. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ப்ரட் தூள் மற்றும் கார்ன் மாவில் தோய்த்து எடுத்துக் கொள்ளவும்
 21. பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்
 22. சுவையான வாழைத்தண்டு உருளை கட்லட் ரெடி
 23. இஞ்சி தீயல் செய்ய: துருவிய இஞ்சி பூண்டு சீரகம் தேங்காய் மற்றும் புளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்
 24. பொன்னிறமாக வறுத்து எடுத்த பின் அது ஆறிய பின்பு மிக்ஸியில் சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்
 25. பின் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுது இதனுடன் சேர்த்து கொதிக்க விடவும்
 26. சுவையான இஞ்சி தீயல் ரெடி
 27. வாழைத்தண்டு க்ரீமி சூப் செய்ய: முதலில் வாணலியில் நெய் சேர்த்து சீரகம் கறிவேப்பிலை பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்
 28. பின் அதனுடன் வாழைத்தண்டு வேகவைத்து அரைத்து வைத்த சாரை உப்புடன் சேர்த்து அதனுடன் கலக்கவும்
 29. பின்னர் அரை டீஸ்பூன் மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
 30. பின் மற்றொரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து சிறு சிறிதாக வெட்டிய பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்
 31. பின் மேலே குறிப்பிட்ட வாழைத்தண்டு சாறை வடிகட்டி எடுத்து அதனுடன் கலக்கவும்
 32. இதனுடன் ஒரு டீஸ்பூன் ஃப்ரெஷ் கிரீம் சேர்க்கவும்
 33. இந்த கலவை 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்
 34. சுவையான வாழைத்தண்டு சூப் ரெடி
 35. அடைப் பாயாசம் செய்ய: நன்கு சுண்டக் காய்ச்சிய பாலில் ஜவ்வரிசி பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
 36. பின்னர் ஏலக்காய்த்தூள் நெய்யுடன் காய்ந்த முந்திரி பாதாம் திராட்சை ஆகியவற்றை கலந்து கொள்ளவும்
 37. தித்திப்பான அடை பாயாசம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்