அம்மாவின் ஸ்பெஷல் அரைத்த வத்தக்குழம்பு | Ammavin special araitha vathakuzhambu in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  11th Dec 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Ammavin  special araitha vathakuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
அம்மாவின் ஸ்பெஷல் அரைத்த வத்தக்குழம்புKrishnasamy Vidya Valli
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    25

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

0

0

அம்மாவின் ஸ்பெஷல் அரைத்த வத்தக்குழம்பு recipe

அம்மாவின் ஸ்பெஷல் அரைத்த வத்தக்குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Ammavin special araitha vathakuzhambu in Tamil )

  • புளி ஒரு எலுமிச்சை அளவு
  • உப்பு ஒரு தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  • வெல்லம் ஒரு சிறிய துண்டு
  • தேங்காய் எண்ணெய் 1/2 மேசைக்கரண்டி
  • சுண்டைக்காய் வத்தல் 2 மேஜைக்கரண்டி
  • வறுத்து அரைக்க
  • தேங்காய் எண்ணெய் 1/4 தேக்கரண்டி
  • மிளகு 1 தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு ஒரு மேசைக்கரண்டி
  • மிளகாய் வற்றல் மூன்று அல்லது நான்கு
  • கட்டி பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  • தாளிக்க
  • தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டி
  • கடுகு ஒரு தேக்கரண்டி
  • மிளகாய்வற்றல் 1 அல்லது 2
  • கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  • தேங்காய்த்துருவல் 2 மேஜைக்கரண்டி
  • பெருங்காயம் 1/8 தேக்கரண்டி

அம்மாவின் ஸ்பெஷல் அரைத்த வத்தக்குழம்பு செய்வது எப்படி | How to make Ammavin special araitha vathakuzhambu in Tamil

  1. வறுத்து அரைக்க கொடுத்தவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும்
  2. எண்ணெய் விட்டு சுண்டைக்காய் வத்தலை நன்றாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் புளியை கரைத்து விட்டு உப்பு மஞ்சள் பொடி வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்
  4. பச்ச வாசனை போனவுடன் அரைத்த விழுது சேர்த்து நன்றாக கொதித்த பின் (கெட்டியானவுடன்) இறக்கவும்
  5. தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  6. வறுத்த சுண்டைக்காய் மற்றும் தாளித்ததை சேர்த்து கலந்து கொள்ளவும்
  7. சூடு சாதம் சுட்ட அப்பளத்துடன் பரிமாறவும்

எனது டிப்:

விருப்பப்பட்டால் வெங்காயம் சேர்க்கலாம்

Reviews for Ammavin special araitha vathakuzhambu in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.