வீடு / சமையல் குறிப்பு / மட்டன் குழம்பு

Photo of Mutton curry by Wahida Abdul Hameed at BetterButter
107
0
0(0)
0

மட்டன் குழம்பு

Dec-11-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் குழம்பு செய்முறை பற்றி

சுவையான மட்டன் குழம்பு சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, இடியாப்பம், பூரி, பரோட்டா என எல்லாவற்றுடனும் செம டேஸ்டாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • మీడియం/మధ్యస్థ
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • నూనె లేకుండ వేయించటం
  • సైడ్ డిషెస్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் அரை கிலோ
  2. வெங்காயம்-2 நீளவாக்கில் அரிந்தது
  3. தக்காளி-2
  4. பச்சை மிளகாய் ஒன்று
  5. கருவேப்பிலை சிறிதளவு
  6. பட்டை இரண்டு
  7. ஏலக்காய்-3
  8. கிராம்பு-3
  9. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  10. Homemade மசாலா பவுடர் 5 அல்லது 6 டீஸ்பூன்
  11. தேங்காய் பால் அல்லது தேங்காய் விழுது ஒரு கப்
  12. உருளைக்கிழங்கு ஒன்று அல்லது இரண்டு
  13. உப்பு ருசிக்கேற்ப
  14. எண்ணெய் நெய் தேவையான அளவு
  15. கொத்தமல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் கருவேப்பிலை பச்சை மிளகாய் சிறிதளவு வெங்காயம் சிறிதளவு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்றாக தாளிக்கவும்.
  2. தாளித்தவுடன் மீதி உள்ள வெங்காயம் சேர்த்து லேசாக கிளறி சேர்த்து லேசாக வதக்கி, மீதி உள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மற்றும் மட்டன் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும். கூடவே நறுக்கிய தக்காளியை போட்டு தக்காளி மசியும் வரை கிளறவும்.
  3. அதனுடன் ஹோம் மேட் குழம்பு மசாலா பவுடர், தேங்காய் விழுது அல்லது தேங்காய் பால் மற்றும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 20 நிமிடம் வேகவிடவும்.
  4. 20 நிமிடம் கழித்து குக்கரை திறந்து சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலக்கவும்.
  5. இப்போது சுவையான மட்டன் குழம்பு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்