Photo of Kaja poori by hajirasheed haroon at BetterButter
993
0
0.0(0)
0

காஜா பூரி

Dec-11-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காஜா பூரி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு ஒரு கப்
  2. ஆரஞ்சு நிற கேசரி பவுடர் ஒரு பின்ச்
  3. தண்ணீர் தேவையான அளவு
  4. சர்க்கரை ஒரு கப்
  5. ஏலக்காய்-2
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. மைதா மாவில் ஆரஞ்சு நிற கேசரி பவுடர் உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும் பிசைந்த மாவை சிறிது நேரம் ஊற விடவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
  3. பிசைந்த மாவை சப்பாத்தி கட்டையில் வட்டமாக பரப்பி அதன் நடுவே மைதா பேஸ்ட் தடவி உருட்டி கொள்ளவும்
  4. உருட்டி அதை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  5. மீண்டும் அதை சப்பாத்தி கட்டையால் நீள்வாக்கில் தேய்க்கவும்
  6. எண்ணெய் சூடானதும் செய்து வைத்துள்ள பூரிகளை எண்ணெயில் மொறுமொறுப்பாக பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்
  7. மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் ஏலக்காய் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்
  8. காய்ச்சிய சர்க்கரை பாகை பொரித்து வைத்துள்ள பூரியில் ஊற்றி ஆறவிடவும்
  9. ஆறியதும் சாப்பிட சுவையாக இருக்கும்
  10. சுவையான காஜா பூரி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்