வீடு / சமையல் குறிப்பு / மட்டன் பிரியாணி

Photo of mutton biryani by Wahida Abdul Hameed at BetterButter
2299
0
0.0(0)
0

மட்டன் பிரியாணி

Dec-11-2018
Wahida Abdul Hameed
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மட்டன் பிரியாணி செய்முறை பற்றி

எப்போதுமே சாப்பிட தூண்டும் மட்டன் பிரியாணி.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • ஏர்ஃப்ரையிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் அரை கிலோ
  2. பாஸ்மதி அரிசி 2 கப்
  3. தயிர் ஒரு டேபிள்ஸ்பூன்
  4. கொத்துமல்லி இலை ஒரு கையளவு
  5. புதினா ஒரு கையளவு
  6. பச்சைமிளகாய்-2
  7. மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  8. கரம் மசாலா ஒரு தேக்கரண்டி
  9. வெங்காயம் 3
  10. தக்காளி-3
  11. இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
  12. எலுமிச்சை பழம் பாதி
  13. பட்டை 2 பெரிய துண்டு
  14. ஏலக்காய் நாலு
  15. கிராம்பு-3
  16. பிரியாணி இலை ஒன்று
  17. அன்னாசி பூ 1
  18. ஜாவித்ரி 1
  19. எண்ணெய் நெய் தேவையான அளவு
  20. உப்பு ருசிக்கேற்ப
  21. தண்ணீர் தேவையான தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை அன்னாசிப்பூ ஜாவித்ரி போட்டு தாளிக்கவும்.
  2. அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  3. கூடவே இஞ்சி பூண்டு விழுது சுத்தம் செய்தல் மட்டன் துண்டுகளை போட்டு நன்றாக கிளறவும்
  4. அதனுடன் தக்காளி சேர்த்து தக்காளி கரையும் வரை கிளறி
  5. மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் புதினா கொத்தமல்லி சேர்த்து கிளறி கால் கப் அல்லது சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அதில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 20 நிமிடம் மட்டனை நன்றாக வேக விடவும்.
  6. மட்டன் வெந்ததும் 1 கப் பாசுமதி அரிசிக்கு 1 ¼ கப் தண்ணீர் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் அரை மணி நேரம் ஊற வைத்த பாசுமதி அரிசியை போட்டு குக்கரை மூடி 10 நிமிடம் வேக விடவும். 10 நிமிடம் கழித்து ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து லேசாக கிளறி பரிமாறவும். சுவையான மட்டன் பிரியாணி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்