வீடு / சமையல் குறிப்பு / முள்ளங்கி துவையல்

Photo of Radish chutney by Fathima Beevi at BetterButter
269
0
0.0(0)
0

முள்ளங்கி துவையல்

Dec-11-2018
Fathima Beevi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முள்ளங்கி துவையல் செய்முறை பற்றி

முள்ளங்கி துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முள்ளங்கி-1
  2. தேங்காய் துருவல்-2 டேபிள் ஸ்பூன்
  3. தக்காளி-1
  4. சீரகம்-1/4 டீ ஸ்பூன்
  5. உளுந்தம் பருப்பு -1/2 டேபிள் ஸ்பூன்
  6. கடலைப்பருப்பு-1/2 டேபிள் ஸ்பூன்
  7. மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
  8. மிளகாய் வற்றல்-5
  9. புளி- ஒரு பாதி நெல்லிக்காய் அளவு
  10. எண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
  11. உப்பு- தேவையான அளவு
  12. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  13. கரம் மசாலா தூள்- ஒரு சிட்டிகை
  14. பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை
  15. தாளிக்க தேவையான பொருட்கள்:
  16. கருலேப்பில்லை- ஒரு கொத்து
  17. வெங்காயம்-1 டேபிள் ஸ்பூன்
  18. எண்ணெய்-  2 டீ ஸ்பூன்
  19. கடுகு  -1/4 டீ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முள்ளங்கியை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்      
  2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு  சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்
  3. காய்ந்த மிளகாய் வற்றல், மல்லி, சீரகம் சேர்த்து வதக்கவும்
  4. பின்பு தக்காளி, புளி சேர்த்து வதக்கவும்
  5. தக்காளி நன்கு வதங்கியதும், முள்ளங்கியை சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. பின்பு உப்பு, மஞ்சள் தூள், பெருங் காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  7. துருவிய தேங்காய் சேர்த்து கிளறி சிறிது நேரம் குளிர வைத்து அரைத்து எடுக்கவும்  
  8. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, கருலேப்பில்லை, வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள சட்னியை தேவையான அளவு தண்ணீர் கலந்து தாளிப்பில் சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்
  9. முள்ளங்கி சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்