வீடு / சமையல் குறிப்பு / அவரக்காய் சிறுபருப்பு

Photo of flat beans moong dal gravy by Wahida Abdul Hameed at BetterButter
548
0
0.0(0)
0

அவரக்காய் சிறுபருப்பு

Dec-12-2018
Wahida Abdul Hameed
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவரக்காய் சிறுபருப்பு செய்முறை பற்றி

குறைந்த பொருட்களை வைத்தே எளிதாக செய்யக்கூடிய குழம்பு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிறுபருப்பு 1 ½ கப்
  2. அவரைக்காய் கால் கிலோ
  3. வெங்காயம்-1
  4. தக்காளி 1
  5. பச்சை மிளகாய்-1
  6. பூண்டு 8 பல்
  7. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  9. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  10. உப்பு ருசிக்கேற்ப
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. கடுகு ஒரு ஸ்பூன்
  13. சீரகம் ஒரு ஸ்பூன்
  14. உளுந்து ஒரு ஸ்பூன்
  15. க௫வேப்பிலை சிறி

வழிமுறைகள்

  1. சிறு பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து கழுவி தனியே எடுத்து வைக்கவும். தாளிப்பதற்கு நறுக்கிய வெங்காயத்தில் சிறிதளவு தனியே எடுத்து வைக்கவும்.
  2. வெங்காயம் அவரைக்காய், பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  3. ஒரு குக்கரில் வறுத்த சிறுபருப்பு, அவரைக்காய், பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும்வரை வேகவிடவும்.
  4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து கருவேப்பிலை போட்டு தாளித்து வெந்த சிறு பருப்பு கலவை தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
  5. இதனுடன் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும். சுவையான அவரைக்காய் சிறுபருப்பு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்