மொச்சை குழம்பு | Mochai kuzhambu in Tamil

எழுதியவர் Krishnasamy Vidya Valli  |  13th Dec 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Mochai kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
மொச்சை குழம்புKrishnasamy Vidya Valli
  • ஆயத்த நேரம்

    2

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    35

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

0

0

மொச்சை குழம்பு recipe

மொச்சை குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Mochai kuzhambu in Tamil )

  • மொச்சை கால் கப்
  • புளி பாதி எலுமிச்சை அளவு
  • உப்பு அரை தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி 2 சிட்டிகை
  • காரப் பொடி கால் தேக்கரண்டி
  • குழம்பு பொடி ஒரு தேக்கரண்டி
  • வெல்லம் ஒரு சிறிய துண்டு
  • தாளிக்க
  • நல்லெண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
  • கடுகு சீரகம் வெந்தயம் தலா அரை தேக்கரண்டி
  • பெருங்காயம் கால் தேக்கரண்டி
  • கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  • மிளகாய் வற்றல் 1

மொச்சை குழம்பு செய்வது எப்படி | How to make Mochai kuzhambu in Tamil

  1. மொச்சையை இரண்டு மணி நேரம் ஊறவைத்து பின்னர் குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து மஞ்சள்தூள் காரப்பொடி குழம்பு பொடி சேர்த்து வதக்கவும்
  3. புளியைக் கரைத்து விட்டு உப்பு வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும்
  4. வேக வைத்த மொச்சை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  5. சூடாகப் பரிமாறவும்

எனது டிப்:

பச்ச மொச்சையில் செய்தால் கூடுதல் சுவை. விரும்பினால் வெங்காயம் சேர்க்கவும்

Reviews for Mochai kuzhambu in tamil (0)