Photo of chole by Wahida Abdul Hameed at BetterButter
410
0
0.0(0)
0

சோலே

Dec-13-2018
Wahida Abdul Hameed
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சோலே செய்முறை பற்றி

வெள்ளை கொண்டைக்கடலை வைத்து செய்யும் இந்த சோலை நார்த் இந்தியாவில் மிகவும் ஃபேமஸ். சப்பாத்தி மற்றும் பூரிக்கு தொட்டு சாப்பிட ஏற்றது. வெறுமனே சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பஞ்சாபி
  • ஸ்டிர் ஃபிரை
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெள்ளை கொண்டைக்கடலை/ சன்னா 100கிராம்
  2. வெங்காயம்-2
  3. தக்காளி 1
  4. மிளகாய்த்தூள் ½ டீஸ்பூன்
  5. தனியா தூள் ½ டீஸ்பூன்
  6. சோலே மசாலா பவுடர் 1 டேபிள்ஸ்பூன்
  7. பச்சை மிளகாய் 1
  8. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  9. பட்டர் ஒரு மேசைக்கரண்டி
  10. உப்பு தேவையான அளவு
  11. எலுமிச்சை பழம் 1
  12. கொத்தமல்லி இலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. கொண்டக்கடலை குறைந்தது 8 மணி நேரம் அல்லது ஒரு நாள் இரவு முன்னதாகவே ஊற வைக்க வேண்டும்.
  2. ஊரிய கொண்டக்கடலையுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து 3 அல்லது 4 விசில் விட்டு வேக வைத்து தனியே எடுத்து வைக்கவும்.
  3. ஒரு வாணலியில் பட்டர் சேர்த்து. சூடானதும் நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் அதனுடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், சோலே மசாலா பவுடர் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும், மசாலா கருகாமல் மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
  5. அதனுடன் நறுக்கிய தக்காளி ஒரு பச்சை மிளகாய் துருவிய இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  6. இதனுடன் வேக வைத்த கொண்டைக்கடலை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் வேக வைத்து இறக்கினால் சுவையான சோலை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்