வீடு / சமையல் குறிப்பு / பருப்பு கத்திரிக்காய்

Photo of Dal with raw mango, brinjal by Wahida Abdul Hameed at BetterButter
405
0
0.0(0)
0

பருப்பு கத்திரிக்காய்

Dec-13-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு கத்திரிக்காய் செய்முறை பற்றி

நெய் சோறு மற்றும் கறி குழம்புடன் சாப்பிட ஏற்ற சைடு டிஷ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம் பருப்பு நூறு கிராம்
  2. கத்தரிக்காய் 3
  3. தக்காளி-2
  4. வெங்காயம் 1
  5. மாங்காய் பாதி அளவு
  6. குழம்பு மசாலா பொடி/ ஹோம் மேட் மசாலா பவுடர் 1 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் ½ ஸ்பூன்
  8. பூண்டு 5 பல்
  9. பச்சை மிளகாய் 3
  10. உப்பு ருசிக்கேற்ப
  11. கடுகு 1 ஸ்பூன்
  12. சீரகம் 1 ஸ்பூன்
  13. உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
  14. கருவேப்பிலை சிறிதளவு
  15. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் துவரம்பருப்பு நறுக்கிய கத்தரிக்காய், மாங்காய், வெங்காயம், தக்காளி, பூண்டு, ஹோம்மேட் மசாலா பவுடர், மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும். அல்லது பருப்பு வேகும் வரை விசில் விட்டு தனியே எடுத்து வைக்கவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு சீரகம் உளுத்தம்பருப்பு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  3. குக்கரில் ஆவி அடங்கியதும், குக்கரை திறந்து பருப்பை எடுத்து தாளிப்புடன் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்