Photo of Snakegourd dal by Asiya Omar at BetterButter
301
0
0.0(0)
1

Snakegourd dal

Dec-14-2018
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புடலங்காய் - 1/4 கிலோ
  2. பாசிப்பருப்பு -50 கிராம்
  3. மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
  4. மிளகாய்த்தூள் -1/4 தேக்கரண்டி
  5. சீரகத்தூள் -1/2 தேக்கரண்டி
  6. பூண்டு பற்கள் -4
  7. நறுக்கிய பெரிய வெங்காயம் -1/2
  8. உப்பு தேவைக்கு.
  9. அரைக்க:-
  10. தேங்காய்த்துருவல் -3 மே.க
  11. பச்சை மிளகாய் -1
  12. தாளிக்க:-
  13. எண்ணெய் -1 மே.க
  14. கடுகு -1 /2 தேக்கரண்டி
  15. கிள்ளிய மிளகாய்வற்றல் -1
  16. கருவேப்பிலை -2 இணுக்கு
  17. வெங்காயம் -1/2

வழிமுறைகள்

  1. பருப்பு லேசாக மணம் வரும் படி வறுத்து,நீர் விட்டு சிறிது ஊற வைக்கவும். புடலங்காயை பாதியாக வெட்டி நடுவில் உள்ள விதைகள் எடுத்து விட்டு நறுக்கி வைக்கவும்.
  2. வெங்காயம் நறுக்கி வைக்கவும்.தேங்காய் மிளகாய் அரைத்து எடுக்கவும்.
  3. பருப்புடன் தேவைக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். நறுக்கிய வெங்காயம், பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள்,சீரகத்தூள் சேர்க்கவும். பாசிப் பருப்பு அரை வேக்காட்டில் வெந்து வரும் பொழுது புடலங்காய் சேர்த்து வேக விடவும்.
  4. புடலங்காய் சேர்த்து வெந்த பின்பு உப்பு சேர்க்கவும்.
  5. அடுத்து கொர கொரப்பாக அரைத்த தேங்காய் மிளகாய் விழுது சேர்க்கவும்.
  6. ஒன்று சேர்த்து பிரட்டி கொதிக்க விடவும்.பின்பு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சூடானவுடன் கடுகு,வற்றல்,கருவேப்பிலை தாளித்து,வெங்காயம் சிவற வதக்கி கொட்டவும்.
  7. சுவையான புடலங்காய் பாசிப்பருப்பு தயார்.
  8. சூடான சாதம் சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்