வீடு / சமையல் குறிப்பு / பருப்பு உருண்டை குழம்பு

Photo of paruppu urundai Kulambu by Wahida Abdul Hameed at BetterButter
868
0
0.0(0)
0

பருப்பு உருண்டை குழம்பு

Dec-14-2018
Wahida Abdul Hameed
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு உருண்டை குழம்பு செய்முறை பற்றி

அனைவருக்கும் பிடித்த பருப்பு உருண்டை குழம்பு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பருப்பு உருண்டை செய்ய:-
  2. கடலைப்பருப்பு 1 கப்
  3. துவரம் பருப்பு ¼ கப்
  4. பச்சை மிளகாய் 1
  5. வெங்காயம் 1
  6. கொத்துமல்லி சிறிதளவு
  7. குழம்பு செய்ய :-
  8. கடுகு 1 ஸ்பூன்
  9. சீரகம் ½ ஸ்பூன்
  10. சோம்பு ½ ஸ்பூன்
  11. கருவேப்பிலை சிறிதளவு
  12. வெங்காயம் 1
  13. தக்காளி 1
  14. பூண்டு 5 பல்
  15. குழம்பு மசாலா தூள் ஒரு குழம்பு மசாலா தூள் 1 மேசைக்கரண்டி
  16. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  17. புளி ஒரு எலுமிச்சம்பழ அளவு
  18. தேங்காய் விழுது ½ கப்
  19. உப்பு ருசிக்கேற்ப
  20. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தண்ணீரில் துவரம்பருப்பு கடலைப் பருப்பு 2 மணி நேரம் ஊறவைத்து, அதனுடன் சோம்பு, சீரகம் போட்டு தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் கடுகு, சீரகம், சோம்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து
  3. பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம் பூண்டு போட்டு வதக்கி, குழம்பு மசாலா தூள் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
  4. இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதங்கியதும் புளிக் கரைசல் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
  5. இதனுடன் அரைத்த தேங்காய் விழுது, ஆவியில் வேக வைத்த பருப்பு உருண்டைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும்.
  6. சுவையான பருப்பு உருண்டை குழம்பு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்