வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் மற்றும் கறுப்பு கொண்டைக்கடலை பொரியல்

Photo of Snake gourd and black chenna poriyal by sudha rani at BetterButter
417
0
0.0(0)
0

புடலங்காய் மற்றும் கறுப்பு கொண்டைக்கடலை பொரியல்

Dec-15-2018
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் மற்றும் கறுப்பு கொண்டைக்கடலை பொரியல் செய்முறை பற்றி

சுரைக்காய் மற்றும் புடலங்காய் ஆகியவற்றுடன் ஏதேனும் பயறு வகைகள் சேர்த்து செய்ய மிகவும் ருசியாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. புடலங்காய் 1/2 கிலோ
  2. கறுப்பு கொண்டைக்கடலை 100 கிராம்
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 5
  5. பச்சை மிளகாய் 2
  6. கறிவேப்பிலை சிறிது
  7. கொத்தமல்லி தழை
  8. நசுக்கிய பூண்டு 6
  9. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் 1/4 ஸ்ப
  11. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  12. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  13. பெருங்காயத்தூள் 2 சிட்டிகை
  14. தேங்காய் துருவல் 1 கப்
  15. உப்பு தேவையான அளவு
  16. கடுகு 1 ஸ்பூன்
  17. சோம்பு 1/4 ஸ்பூன்
  18. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்
  2. புடலங்காயின் தோல் சீவி உள்ளே உள்ள விதையை நீக்கி விட்டு நறுக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை சோம்பு நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  6. தக்காளி நன்கு கரைந்து சுண்டி வந்ததும் தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கவும்
  7. பின் நறுக்கிய புடலங்காய் மற்றும் ஊறிய கறுப்பு கொண்டைக்கடலை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  8. பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்
  9. பின் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து கொத்தமல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்