வீடு / சமையல் குறிப்பு / சுல்தானி தால்

Photo of sultani dal by Wahida Abdul Hameed at BetterButter
417
1
0.0(0)
0

சுல்தானி தால்

Dec-15-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுல்தானி தால் செய்முறை பற்றி

சுல்தானிய தால் என்பது நவாபுகளின் தால் ரெசிபி, இது மிகவும் ரிச் மற்றும் கிரீமியாகவும், சுவையாகவும் இருக்கும் இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துவரம்பருப்பு ஒரு கப்
  2. பால் ஒரு கப்
  3. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
  4. பச்சை மிளகாய் 1 பொடியாக நறுக்கியது
  5. இஞ்சி ஒரு பெரிய துண்டு பொடியாக நறுக்கியது
  6. தயிர் கால் கப்
  7. பூண்டு 6 பல் பொடியாக நறுக்கியது
  8. மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி
  9. மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி
  10. காய்ந்த மிளகாய் இரண்டு
  11. சீரகம் ஒரு தேக்கரண்டி
  12. நெய் எண்ணெய் தேவையான அளவு
  13. உப்பு ருசிக்கேற்ப
  14. தண்ணீர் சிறிதளவு
  15. ஃப்ரஷ் கிரீம் சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் கழுவிய துவரம்பருப்பு ஒரு கப் அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து சேர்த்து 4 அல்லது 5 விசில் விட்டு வேக விடவும்.
  2. பருப்பு வெந்தவுடன் அதை நன்றாக மசித்து அதனுடன் பால் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
  3. ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் சீரகம், நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சேர்த்து நன்றாக கிளறி அதனுடன் பால் மற்றும் தயிர் சேர்த்து வேக வைத்த பருப்பை போட்டு நன்றாக கலக்கி பரிமாறவும்.
  4. சுவையான ரிச் மற்றும் கிரிமியான சுல்தானி தால் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்