Photo of Chennai beach sundal by Chitra Purushothaman at BetterButter
643
1
0.0(1)
0

Chennai beach sundal

Dec-15-2018
Chitra Purushothaman
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காய்ந்த வெள்ளை பட்டாணி 100கிராம் - கழுவி இரவு முழுதும் அல்லது 8-10 மணிநேரம் ஊறவைத்து, குக்கரில் 5 விசில் வரும்வரை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  2. பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும்
  3. தக்காளி 1, சிறியதாக இருந்தால் 2 பொடியாக நறுக்கவும்
  4. பூண்டு 4 பற்கள் பொடியாக நறுக்கவும்
  5. மஞ்சள் தூள் 2 சிட்டிகை
  6. மிளகாய் தூள் ¾ தேக்கரண்டி
  7. தனியா தூள் 1½ தேக்கரண்டி
  8. உப்பு தேவையான அளவு
  9. கறிவேப்பிலை 5
  10. எண்ணெய் 3 தேக்கரண்டி
  11. கடுகு ¼ தேக்கரண்டி
  12. சோம்பு ¼ தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் பூண்டு, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறம் ஆகும்வரை வதக்கவும்.
  2. பின்னர் தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. லேசாக எண்ணெய் விட ஆரம்பித்ததும், வேகவைத்துள்ள பட்டாணியை நீருடன் வெங்காயம் தக்காளி கலவையில் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
  4. உப்பு சற்றே நீர்க்க இருக்க வேண்டும். தேவைக்கு தக்கபடி நீரூற்றி நன்கு கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
Dec-15-2018
Vasuyavana   Dec-15-2018

Excellent

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்