வீடு / சமையல் குறிப்பு / கொண்டைக்கடலை பறவைக்கூடு

Photo of Channa dal birds nest by Rabia Hamnah at BetterButter
440
0
0.0(0)
0

கொண்டைக்கடலை பறவைக்கூடு

Dec-16-2018
Rabia Hamnah
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொண்டைக்கடலை பறவைக்கூடு செய்முறை பற்றி

கொண்டக்கடலை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் அவர்கள் கொண்டகடலை என்று அறியாமல் சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொண்டைக்கடலை -1கப் வேக வைத்தது
  2. உருளைக்கிழங்கு -2-3 வேக வைத்து மசித்து
  3. வெங்காயம் -1 பொடியாக நறுக்கியது
  4. பச்சை மிளகாய்- 1 நறுக்கியது
  5. மல்லி கருவேப்பிலை- கொஞ்சம் நறுக்கியது
  6. மிளகாய் தூள் -ஒரு ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்
  8. கரம் மசாலா தூள் -அரை ஸ்பூன்
  9. உப்பு -தேவைக்கு
  10. இஞ்சி பூண்டு விழுது- ஒரு ஸ்பூன்
  11. corn flour மாவு -2 டேபிள்ஸ்பூன்
  12. எண்ணெய் -பொரிக்க

வழிமுறைகள்

  1. முதலில் வேக வைத்த கொண்டைக் கடலையை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
  2. வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து நன்றாக மசித்துக்கொள்ளவும்
  3. ஒரு பவுலில் அரைத்த கொண்டக்கடலை மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து , பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும்
  4. பின்பு இஞ்சி பூண்டு விழுது தேவைக்கு உப்பு சேர்க்கவும்
  5. பின்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவும்
  6. உள்ளங்கையில் எண்ணை தேய்த்துக் கொள்ளவும் மாவு ஒட்டாமல் வருவதற்கு இது உதவும்
  7. கலந்து வைத்த கலவையில் சிறு உருண்டையை எடுத்து உள்ளங்கையில் தட்டி நடுவில் சிறு குழி போல் அழுத்திக் கொள்ளவும்
  8. பின்பு கார்ன்ஃப்ளார் மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் போல் கலந்து வைக்கவும்
  9. சேமியாவை நன்கு நறுக்கி ஒரு தட்டில் பரத்தி வைக்கவும்
  10. சேமியா உடன் சிறிது பிரட் க்ரம்ப்ஸ் சேர்த்துக் கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும்
  11. பின்பு நாம் தட்டி வைத்த கலவையை எடுத்து கார்ன்ஃப்ளார் பேஸ்டில் முக்கி சேமியாவில் பிரட்டி வைக்கவும்
  12. இப்படி எல்லாவற்றையும் செய்து வைக்கவும் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு காய வைக்கவும்
  13. எண்ணெயை மிதமான தீயில் வைத்துக் கொண்டு நாம் செய்து வைத்த கலவையை சேர்த்து பொரித்து எடுக்கவும்
  14. சுவையான ஆரோக்கியமான குழந்தைகளுக்குப் பிடித்த கொண்டைக்கடலை பறவைக்கூடு தயார்
  15. பொரித்து எடுத்த பறவை கூட்டின் மேல் இரண்டு கொண்டக்கடலையை வைத்தால் முட்டையைப் போன்று தோற்றமளிக்கும் குழந்தைகள் விரும்புவார்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்