வீடு / சமையல் குறிப்பு / முளைக்கட்டிய பயிறு சாலட்

Photo of Sprouted greengram salad by Fathima Beevi at BetterButter
118
0
0.0(0)
0

முளைக்கட்டிய பயிறு சாலட்

Dec-16-2018
Fathima Beevi
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

முளைக்கட்டிய பயிறு சாலட் செய்முறை பற்றி

முளைக்கட்டிய பயிறு சாலட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்டீமிங்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முளைக்கட்டிய பயிறு -1 கப்
  2. தக்காளி-1
  3. வெங்காயம்-1
  4. பீட்ரூட்-1/2
  5. காரட்-1
  6. உருளைக்கிழங்கு-2
  7. எலுமிச்சைப்பழம்-1/2
  8. வெள்ளரிக்காய்-1
  9. உப்பு- தேவையான அளவு
  10. மிளகு சீரகத் தூள்- 1 டீஸ்பூன்
  11. மிளகாய்தூள்-1/4 டீ ஸ்பூன்
  12. எண்ணெய்- பொறிப்பதற்கு
  13. கொத்தமல்லி இலை-1/4 கப்

வழிமுறைகள்

  1. வெங்காயம், தக்காளி, பீட்ரூட், காரட், வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. முளைக்கட்டிய பயிறை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்
  3. உருளைக்கிழங்கை விரல் அளவு போல் நறுக்கி கொள்ளவும்
  4. நறுக்கிய உருளைக்கிழங்கை தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிளறி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் உருளைக்கிழங்கை முறுகலாக பொறித்து எடுக்கவும்.
  6. ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், வேக வைத்த முளைக்கட்டிய பயிறு சேர்க்கவும்.
  7. பின்பு தேவையான அளவு உப்பு, மிளகு சீரகத் தூள் தூவி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும்.
  8. பொறித்து வைத்துள்ள உருளைக்கிழங்கைசேர்த்து கிளறி கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்