வீடு / சமையல் குறிப்பு / வெந்தயக்கீரை பருப்பு குழம்பு

Photo of Fenugreek leaves dal curry by Fathima Beevi at BetterButter
337
0
0.0(0)
0

வெந்தயக்கீரை பருப்பு குழம்பு

Dec-16-2018
Fathima Beevi
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெந்தயக்கீரை பருப்பு குழம்பு செய்முறை பற்றி

வெந்தயக்கீரை பருப்பு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வெந்தயக்கீரை  - 1கப்
  2. பாசிப்பருப்பு-50 கிராம்
  3. துவரம் பருப்பு-25கிராம்
  4. பெரிய வெங்காயம்-1
  5. தக்காளி-1
  6. பெரிய பச்சை மிளகாய்-1
  7. மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்
  8. மிளகாய் தூள்-1/4 டீ ஸ்பூன்
  9. பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
  10. உப்பு- தேவையான அளவு
  11. தாளிக்க தேவையான பொருட்கள்:
  12. தேங்காய் எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  13. கடுகு-1/4 டீ ஸ்பூன்
  14. சீரகம்-1/4 டீ ஸ்பூன்
  15. கருலேப்பில்லை -ஒரு கொத்து
  16. நறுக்கிய வெங்காயம்- 1 டேபிள் ஸ்பூன்
  17. காய்ந்த மிளகாய் வற்றல்-2

வழிமுறைகள்

  1. வெந்தயக்கீரையை நன்றாக கழுவி எடுக்கவும்
  2. தக்காளி, பெரிய வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்
  3. பாசிப்பருப்பு, துவரம் பருப்பை சுத்தம் செய்து கொள்ளவும்
  4. ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, துவரம் பருப்பு,  பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், பெருங் காயத்தூள், வெந்தயக்கீரை, வெங்காயம், தக்காளி, உப்பு  சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
  5. விசில் அடங்கியதும், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு, சீரகம்  பொடித்து கருலேப்பில்லை, வெங்காயம், காய்ந்த மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கி தாளித்து குழம்பில்  சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்