வீடு / சமையல் குறிப்பு / தட்டை பயறு சாதம்

Photo of Cowpeas rice by Neela Karthik at BetterButter
606
0
0.0(0)
0

தட்டை பயறு சாதம்

Dec-17-2018
Neela Karthik
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தட்டை பயறு சாதம் செய்முறை பற்றி

தட்டை பயறு வைத்து ஆரோக்கியமான முறையில் குழந்தைகளுக்கு ஏற்ற லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தட்டைபயரு 1/4 கப்(வறுத்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்)
  2. அரிசி 1 கப்(1/2 மணி நேரம் ஊற வைத்தது
  3. வெங்காயம் 1 (நீளவாக்கில் மெல்லியதாக நருக்கியது)
  4. தக்காளி 1(பொடியாக நறுக்கியது)
  5. சாம்பார் பவுடர் 1 டேபிள் ஸ்பூன்
  6. தனியா பவுடர் 1 ஸ்பூன்
  7. பட்டை லவங்கம் ஏலக்காய் தலா 2
  8. உப்பு தேவையான அளவு
  9. தண்ணீர் 3 கப்
  10. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஊற வைத்த தட்டை பயறு 1 விசில் விட்டு வேக வைத்து தண்ணிரை தனியே வைத்து எடுத்து கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் விட்டு காயந்ததும் பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் இல்லாமல் வதக்கவும்.
  5. அனைத்து மசாலா தூளையும் சேர்த்து வதிக்கி வேக வைத்த தட்டை பயறு தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அதில் அரிசி சேர்த்து மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.
  7. தட்டை பயறு வேக வைத்த தண்ணிரை அளந்து ஊற்றவும் பின் தேவை பட்டால் இன்னும் தண்ணிரை சேர்த்து கொள்ளவும்.
  8. தட்டை பயறு முதல் நாள் இரவே ஊற வைத்து செய்யலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்