வீடு / சமையல் குறிப்பு / டால் நகெட்ஸ்

Photo of Dal nuggets by Krishnasamy Vidya Valli at BetterButter
393
0
0.0(0)
0

டால் நகெட்ஸ்

Dec-17-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

டால் நகெட்ஸ் செய்முறை பற்றி

குழந்தைகள் விரும்பும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வெரைட்டி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலைப் பருப்பு பாசிப்பருப்பு துவரம்பருப்பு தலா 1/8 கப்
  2. கேரட் துருவல் 1/8 கப்
  3. கான்ப்ளவர் அல்லது அரிசி மாவு ஒரு தேக்கரண்டி
  4. கொத்தமல்லி இலை சிறிது
  5. உப்பு 1/4 தேக்கரண்டி + 1/8 தேக்கரண்டி
  6. காஷ்மீரி சில்லி பவுடர் 1/2 தேக்கரண்டி
  7. தனியா பொடி கரம் மசாலா பொடி சீரகப் பொடி மிளகு பொடி ஆம்சூர் பொடி தலா கால் தேக்கரண்டி
  8. ஷாலோ பிரை செய்வதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. எல்லா பருப்புகளையும் தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைத்து அளவாகத் தண்ணீர் விட்டு வேகவைத்து எடுக்கவும்
  2. அதோடு கொடுக்கப்பட்ட எல்லாவற்றையும் எண்ணெய்த்தவிர சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சிலிண்டர் வடிவத்தில் தட்டிக் கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் செய்து வைத்த நகெட்ஸ்ஸை ஷாலோ பிரை செய்து எடுக்கவும்.
  5. சாஸுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்