வீடு / சமையல் குறிப்பு / முளைகட்டிய பயறு சாந்து

Photo of Sprout gram shandu by sudha rani at BetterButter
431
0
0.0(0)
0

முளைகட்டிய பயறு சாந்து

Dec-17-2018
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முளைகட்டிய பயறு சாந்து செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முளைகட்டிய பயறு 1 கப்
  2. வெங்காயம் 3
  3. தக்காளி 2
  4. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  6. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  7. மல்லித்தூள் 2 ஸ்பூன்
  8. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  9. புளிக்கரைசல் 1/4 கப்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய்
  12. கடுகு 1 ஸ்பூன்
  13. வரமிளகாய் 1
  14. கறிவேப்பிலை சிறிது
  15. கொத்தமல்லி தழை
  16. முளைகட்ட தேவையான பயறு வகைகள்:
  17. தட்டபயறு
  18. வெள்ளை சுண்டல்
  19. கருப்பு சுண்டல்
  20. மொச்ச பயறு
  21. துவரம் பருப்பு
  22. பச்சை பயறு
  23. பாசிப்பருப்பு
  24. அவரைப் பருப்பு
  25. பீன்ஸ் கொட்டை
  26. பட்டாணி
  27. வேர்கடலை
  28. வெள்ளை சோயா பீன்ஸ்
  29. அனைத்தும் ஒவ்வொரு கைப்பிடி அளவு

வழிமுறைகள்

  1. முளைகட்ட கொடுத்துள்ள பொருட்களை முதல் நாள் இரவு ஊறவிடவும்
  2. பின் மறுநாள் காலையில் அதை நன்கு இரண்டு முறை அலசி தண்ணீர் வடிகட்டி சுத்தமான துணியால் முடி போட்டு கட்டிவைத்து சமையல் அறையில் சிறிது வெயில் படுமான இடத்தில் வைக்கவும்
  3. மறுநாள் அது முளைத்து விடும் சுமார் ஒரு இரண்டு நாட்கள் நன்கு முளப்பு வளரும் வரை வைக்கவும்
  4. பின் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளவும்
  5. முளைகட்டிய பயறு சாந்து:
  6. முளைகட்டிய பயறை சிறிது உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்
  7. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை வரமிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்
  8. பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்
  9. பின் சாம்பார் பொடி மஞ்சள் தூள் மல்லித்தூள் சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  10. பின் வேகவைத்த பயறை சேர்த்து நன்கு வதக்கவும்
  11. பின் புளிக்கரைசல் விட்டு உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  12. நன்கு சேர்ந்தாற் போல் வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்