Photo of HomeMade Dal Namkeen by Aishwarya Rangan at BetterButter
489
4
5.0(1)
0

HomeMade Dal Namkeen

Dec-17-2018
Aishwarya Rangan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை பருப்பு 1/2 கப்
  2. பாசி பருப்பு 1/2 கப்
  3. சமையல் எண்ணை
  4. சிவப்பு மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  5. சாட் மசாலா 1/4 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. பெருங்காயம் சிறிதளவு

வழிமுறைகள்

  1. நம்கிங் செய்வதற்கு 1/2 கப் பாசிப்பருப்பு மற்றும் 1/2 கப் கடலைப்பருப்பு எடுத்துக் கொள்ளவும்
  2. சிறிதளவு உப்பு சேர்த்து ஊற வைத்தால் நன்றாக பருப்பில் இறங்கி நல்ல டேஸ்ட் கொடுக்கும்
  3. பருப்பை நன்றாகக் கழுவி சிறிதளவு உப்பு சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்
  4. மூன்று மணிநேரம் கழித்து தண்ணீரை நன்றாக வடிகட்டி விட்டு ஒரு துணியில் பருப்பை நன்றாக பரப்பி விடவும்
  5. இவ்வாறு 2 மணி நேரம் விடவும் இதனால் பருப்பில் இருக்கும் தண்ணீர் அனைத்தும் இறங்கிவிடும்
  6. சூடான எண்ணெயில் கடலைப்பருப்பை வறுத்து எடுக்கவும்
  7. மொருமொருப்பாக மாறும் வரை வறுத்து கொள்ளவும்
  8. அதேபோல் பாசிப்பருப்பையும் சூடான எண்ணெயில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
  9. வேர்கடலை ஒரு கையளவு வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  10. வறுத்து எடுத்த பருப்போடு சிறிதளவு உப்பு பெருங்காயம் 1/4 ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் 1/4 ஸ்பூன் சாட் மசாலா சேர்த்து நன்கு கிளறி விடவும்
  11. இதேபோல் பாசிப்பருப்பையும் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும்
  12. இப்போது வீட்டிலேயே haldirams போல் நம்கிங் தயாராகி விட்டது
  13. வெளி கடையில் வாங்காமல் வீட்டிலேயே எளிய முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் நம்கீன் செய்யலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
avish anaa
Dec-17-2018
avish anaa   Dec-17-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்