வீடு / சமையல் குறிப்பு / ஹோட்டல் ஸ்டைல் வடகறி மசால் வடை

Photo of Hotel Style Vadacurry with Masaal Vadai by Gayathri Gopinath at BetterButter
523
1
0.0(0)
0

ஹோட்டல் ஸ்டைல் வடகறி மசால் வடை

Dec-17-2018
Gayathri Gopinath
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஹோட்டல் ஸ்டைல் வடகறி மசால் வடை செய்முறை பற்றி

ஹோட்டல் சுவையில் வடகறி இனி வீட்டில்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வடகறி செய்ய
  2. வெங்காயம் 2 நறுக்கியது
  3. தக்காளி 1 நறுக்கியது
  4. கறிவேப்பிலை சிறிது
  5. மல்லி இலை சிறிது
  6. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜை கிரண்டி
  7. பட்டை 1 ஏலக்காய் 1
  8. பி.இலை 2
  9. மிளகாய் தூள் 2 மேஜை கிரண்டி
  10. மஞ்சள் தூள் 1\2 மேஜை கிரண்டி
  11. கரம் மசாலா 1\2 மேஜை கிரண்டி
  12. எண்ணெய் தேவையான அளவு
  13. உப்பு

வழிமுறைகள்

  1. கடலை பருப்பை 2 மணி நேரம் நீரில் ஊர வைக்கவும்
  2. வெங்காயம் தக்காளி மிளகாய் இவ்வாறு நறுக்கி கொள்ளவும்
  3. கடலை பருப்பை மிக்ஸியில் போட்டு இவ்வாறு அரைத்து கொள்ளவும்
  4. அடுப்பில் ஒரு வானலி வைத்து 3 மேஜை கிரண்டி எண்ணெய் ஊற்றி அரைத்த பருப்பில் 3\4 பகுதியை அதில் போட்டு 5 நிமிடம் கிளரவும்
  5. இவ்வாறு பருப்பு மாறியதும் தட்டில் மாற்றி கெள்ளவும்
  6. அடுப்பில் வானலி வைத்து 2மேஜை கிரண்டி எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை பி.இலை ஏலக்காய் சேர்த்து பின் வெங்காயம் மிளகாய இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  7. தக்காளி மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்
  8. மி.தூள் ம.தூள் கரம் மசாலா உப்பு தே.அளவு சேர்த்து 1 நிமிடம் கிளறி பின் 1 டம்ளர் நீர் சேர்த்து கொதி விடவும் . அதில் 1 மேஜை கிரண்டி ரவை சேர்த்து கிளரவும்
  9. 5 நிமிடம் மிதமான தீயில் கொதித்ததும் தட்டில் உள்ள பருப்பை சேர்க்கவும். பின் 1 ஸ்பூன் கான்பிளவர் மாவை சிறிது நீரில் கரைத்து சேர்க்கவும்
  10. வடகறி கெட்டியானதும் மல்லி இலை தூவி பறிமாரலாம். வடகறி ரொம்ப கெட்டியாக இருந்தால் சிறிது நீரை கொதிக்க வைத்து சேர்த்து உப்பு சரி பார்த்து கொள்ளலாம் . ஹோட்டல் சுவையான வடகறி தயார்.
  11. அரைத்த பருப்பில் மீதியில் பொடியாக நறுக்கிய வெங்காயம் 1மிளகாய் 1இஞ்சி பூண்டு விழுது 1\4 ஸபூன் கறிேவேப்பிலை சிறிது மல்லி இலை சிறிது உப்பு தே.அளவு சோம்பு 1\4 ஸ்பூன் சேர்த்து நன்கு கையால் கிளறி வைத்து கொள்ளவும்
  12. வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடை மாவை உள்ளங்கையில் தட்டி வடை தயார் செய்யவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்