வீடு / சமையல் குறிப்பு / கோஸ் சிறு பருப்பு பொரியல்

Photo of Cabbage moongdal stir fry by Wahida Abdul Hameed at BetterButter
441
0
0.0(0)
0

கோஸ் சிறு பருப்பு பொரியல்

Dec-17-2018
Wahida Abdul Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோஸ் சிறு பருப்பு பொரியல் செய்முறை பற்றி

சிறு பருப்புடன் செய்யும் முட்டைகோஸ் பொரியல் மிகவும் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிறு பருப்பு ¼ கப்
  2. முட்டை கோஸ் ¼ கிலோ
  3. வெங்காயம் 1
  4. பச்சை மிளகாய் 2
  5. மஞ்சள் தூள் ¼ ஸ்பூன்
  6. உப்பு ருசிக்கேற்ப
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. கடுகு 1 ஸ்பூன்
  9. சீரகம் 1 ஸ்பூன்
  10. உளுந்து 1 ஸ்பூன்
  11. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் போட்டு தாளிக்கவும்.
  2. வெறும் வாணலியில் சிறு பருப்பை இலேசாக வறுத்து தண்ணீரில் ஊற வைக்கவும்.
  3. அதனுடன் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி நறுக்கிய முட்டைகோஸ் மற்றும் சிறு பருப்பை சேர்க்கவும்.
  4. நன்றாக கிளறி இதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சிறிது நேரம் வேக விட்டு அடுப்பை ஆப் பண்ணவும். சுவையான முட்டைகோஸ் சிறு பருப்பு பொரியல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்