வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு ரசம்

Photo of Kollu / Horsegram Rasam by Priya Tharshini at BetterButter
232
0
0.0(0)
0

கொள்ளு ரசம்

Dec-18-2018
Priya Tharshini
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு ரசம் செய்முறை பற்றி

கொள்ளு பருப்பு மற்றும் வேகவைத்த பருப்பு தண்ணீர் வைத்து செய்யப்படும் ரசம் மிகவும் நல்லது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சௌத்இந்தியன்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொள்ளு - 1/2 கப்
  2. புளி கரைச்சல் - 1/4 கப்
  3. தக்காளி - 1
  4. பூண்டு - 3 பல்
  5. மிளகு - 1 தேக்கரண்டி
  6. சீரகம் - 1 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  8. உப்பு - தேவைக்கேற்ப
  9. கருவேப்பிலை - தேவைக்கேற்ப
  10. கொத்தமல்லி - தேவைக்கேற்ப
  11. நெய் - 1 தேக்கரண்டி
  12. கடுகு - 1/2 தேக்கரண்டி
  13. சீரகம் - 1/2தேக்கரண்டி
  14. வி.மிளகா - 1

வழிமுறைகள்

  1. கொள்ளை கழுவி தேவையான தண்ணீர் சேர்த்து 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 6 விசில் வேக வைக்கவும்.
  3. வேகவைத்ததும் தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
  4. மிக்ஸியில் பூண்டு , மிளகு மற்றும் சீரகம் சேர்த்து கொறகொற வேன அரைத்துக்கொள்ளவும்.
  5. பாத்திரத்தில் புளி கரைச்சல் , தக்காளி , உப்பு , மஞ்சள் தூள், கருவேப்பிலை மற்றும் அரைத்த மிளகு சீரகம் சேர்த்து கலக்கவும்.
  6. அதை கலக்கி அடுப்பில் வைத்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
  7. 2 மேசைக்கரண்டி வேகைத்த கொள்ளை நன்றாக அரைத்து வடித்த தண்ணீர் உடன் சேர்க்கவும். மீதம் கொள்ளை சுண்டல் செய்யலாம்.
  8. பச்சை வாசனை போனதும் அரைத்த பருப்பு கலந்த தண்ணீரை சேர்க்கவும்.
  9. சிறிய கடாயில் நெய் சூடாக்கி கடுகு , சீரகம் , வி.மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  10. ரசம் நுரைத்து வந்ததும் கொத்தமல்லி மற்றும் தாளிப்பு சேர்த்து அடுப்பை அனைக்கவும். கொள்ளு ரசம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்