வீடு / சமையல் குறிப்பு / பவள மொச்சை மசாலா

Photo of Kidney beans masala / Rajma masala by Hema Lakshmanan at BetterButter
2413
2
5.0(0)
0

பவள மொச்சை மசாலா

Dec-18-2018
Hema Lakshmanan
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பவள மொச்சை மசாலா செய்முறை பற்றி

சப்பாத்தி துனையுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 கப் ராஜ்மா
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  5. 2 மேசைக்கரண்டி தனியா தூள்
  6. 1 1/2 மேசைக்கரண்டி வரமிளகாய்த்தூள்
  7. 1/4 மேசைக்கரண்டி மஞ்சள் தூள்
  8. 1/4 மேசைக்கரண்டி கரம் மசாலா தூள்
  9. உப்பு தேவையான அளவு
  10. 1 குழிக்கரண்டி கடலை எண்ணெய்
  11. 1 பிரிஞ்சி இலை
  12. 1 பட்டை
  13. 2 லவங்கம்

வழிமுறைகள்

  1. ஒரு கப் ராஜ்மாவை போதுமான அளவு தண்ணீரில் 7 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பிறகு ஊறவைத்த ராஜ்மாவை குக்கரில் சேர்த்து போதுமான அளவு தண்ணீர் விட்டு எட்டு விசில் விட்டு வேக வைக்கவும். வேகவைத்த தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும்.
  3. மிக்சி ஜாரில் 1 வெங்காயம், 2 தக்காளி சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். ( வதக்க வேண்டாம் )
  4. கடாயில் ஒரு குழிக்கரண்டி எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும் 1 பட்டை, 2 லவங்கம், 1 பிரிஞ்சி இலை சேர்க்கவும்.
  5. பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  6. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்
  7. பிறகு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்க்கவும்.
  8. இப்போது வேக வைத்த ராஜ்மாவை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
  9. 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
  10. பின்னர் எடுத்து வைத்துள்ள ராஜ்மா வேகவைத்த தண்ணீரை (1/2 கிளாஸ்) சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  11. வாசனைக்காக கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்க வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்