வீடு / சமையல் குறிப்பு / all-in-one பருப்பு ரெசிபி

Photo of all-in-one dal recipe by Lakshmi Priya at BetterButter
517
2
3.0(0)
0

all-in-one பருப்பு ரெசிபி

Dec-18-2018
Lakshmi Priya
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

all-in-one பருப்பு ரெசிபி செய்முறை பற்றி

ஒரே மாவில் அடை உப்புமா, ப்ரோக்கோலி பருப்புசிலி, வாழைத்தண்டு பருப்புசிலி, பருப்பு உருண்டை மோர்க்குழம்பு, பருப்பு உருண்டை குழம்பு, குணுக்கு,அடை,உசிலி சேவை,அடை கொழுக்கட்டை செய்யப்போகிறோம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலைப்பருப்பு ஒரு கப்
  2. துவரம்பருப்பு ஒரு கப்
  3. பாசிப்பருப்பு அரை கப்
  4. உளுந்து 2 ஸ்பூன்
  5. அரிசி அஞ்சு கப்
  6. மிளகாய்வற்றல் காரத்திற்கேற்ப
  7. பச்சை மிளகாய் 3
  8. பெருங்காயம் சிறிது
  9. கருவேப்பிலை சிறிது
  10. கடுகு உளுந்து தாளிக்க
  11. வெந்தயம் சிறிது
  12. அரிசி மாவு ஒரு கப்
  13. பிரக்கோலி சிறிது
  14. வாழைத்தண்டு கால் கப்
  15. புளித்த மோர் சிறிது
  16. கருவேப்பிலை சிறிது
  17. எண்ணை தேவையான அளவு
  18. தண்ணீர் தேவையான அளவு
  19. கடலை பருப்பு தாளிக்க
  20. உளுத்தம்பருப்பு தாளிக்க
  21. குழம்பு பொடி இரண்டு தேக்கரண்டி
  22. புளி எலுமிச்சை அளவு
  23. உப்பு தேவைக்கேற்ப
  24. ரெடிமேடு சேவை 2 கப்
  25. பிரக்கோலி இரண்டு சிறிய கப்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் பருப்புகளை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஊறிய அரிசி மற்றும் பருப்பை கைகழுவ வேண்டும்
  3. ஒரு மிக்ஸியில் அரிசி மற்றும் மிளகாய் வற்றல் சிறிது பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து அரைக்கவும்
  4. பருப்பு வகைகளையும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும்
  5. இந்த கொரகொரப்பாக அரைத்த மாவை சிறிது தனியே எடுத்து வைக்கவும்
  6. அடை உப்புமா செய்ய தேவையான பொருட்கள்
  7. முதலில் கடாயை காய வைத்து அதில் சிறிது கடுகு உளுந்து தாளிக்கவும்
  8. பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து அதனுடன் ஒரு கப் மாவை சேர்த்து கலக்கவும்
  9. அந்த மாவை எண்ணெயிலேயே வேக வேண்டும்
  10. அந்த மாவு உதிரி உதிரியாக அழகாக உதிர்ந்து வரும்
  11. ஐந்து நிமிடத்திலேயே வெந்துவிடும்
  12. இந்த ரெசிபிக்கு சிறிது எண்ணெய் தேவைப்படும்
  13. மாவை கிளறி கிளறி விட வேண்டும்
  14. மூடி போட்டு வேக வைக்கலாம்
  15. சூடான சுவையான அடை உப்புமா தயார்
  16. பிரக்கோலி பருப்புசிலி செய்ய தேவையான பொருட்கள்
  17. பிரக்கோலி சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
  18. என்ன ஒரு இட்லி பாத்திரத்தில் மாவை ஊற்றி வேக வைக்கவும்
  19. வெந்த மாவை தனியாக எடுத்து உதிர்த்துக் கொள்ளவும்
  20. அல்லது மிக்ஸியில் எட்டும் கொள்ளலாம்
  21. பருப்புசிலி மற்றும் சேவை இதை உபயோகித்து கொள்ளலாம்
  22. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  23. அதில் பிரக்கோலியை போட்டு வதக்கவும்
  24. உதிர்த்து வைத்துள்ள அந்த மாவை அதனுடன் சேர்க்கவும்
  25. பிரக்கோலி மென்மையான தன்மை கொண்டதால் இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும்
  26. பிரக்கோலி , மாவை சேர்த்து இன்னும் நான்கு நிமிடம் வதக்கவும்
  27. பிரக்கோலி பருப்புசிலி ஐந்து நிமிடத்தில் தயார்
  28. வாழைத்தண்டு பருப்புசிலி செய்ய தேவையான பொருட்கள்
  29. தண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  30. அதை மோர் மற்றும் சிறிது தண்ணீர் கலந்த கலவையில் போட்டு வைக்கவும்
  31. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து வாழைத்தண்டை போட்டு தண்ணீர் ஊற்றி வேக விடவும்
  32. வெந்தவுடன் அதில் சிறிது உப்பு சேர்த்து அதனுடன் அந்த வேக வைத்துள்ள மாவை போட்டு கிளறவும்
  33. நன்றாக எண்ணெயுடன் அந்த வாழைத்தண்டும் மாவும் சேர்ந்து நல்ல கரகரப்பாக வரும்
  34. வாழைத்தண்டு பருப்பு உசிலி தயார்
  35. குணுக்கு செய்ய தேவையான பொருட்கள்
  36. கொரகொரப்பாக அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் இட்டு அதில் வெங்காயம் சிறிது கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும்
  37. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்
  38. ஏற்கனவே இந்த மாவில் அரிசி சேர்த்திருப்பதால் அரிசி மாவு சேர்க்க தேவையில்லை
  39. மாவு கலவையை சில சிறிதாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்
  40. சூடான சுவையான அடை குணுக்கு தயார்.
  41. உசிலி சேவை செய்ய தேவையான பொருட்கள்
  42. ரெடிமேட் சேவையை சுடு தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்
  43. உப்பு சேர்த்து வேக வைக்கவும்
  44. ஏற்கனவே வேகவைத்து உதிர்த்த அடை மாவை எடுத்துக் கொள்ளவும்
  45. விட கடாயில் கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  46. அதில் வேக வைத்து உதிர்த்த அந்த அடை மாவு கலவையை சேர்க்கவும்
  47. செய்தியை குளிர்ந்த நீரில் சிறிது அலசவும்
  48. அதை வடிகட்டவும்
  49. அந்த சேவையை இந்த தாளிப்பில் போட்டு கிளறவும்
  50. நன்றாக கிளறி கருவேப்பிலை சேர்த்து பரிமாறவும்
  51. சூடான வித்தியாசமான உசிலி சேவை தயார்
  52. அடை கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்
  53. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  54. ஒரு கப் அரிசி மாவை சேர்த்து நன்றாக கிளறவும்
  55. மாதிரிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்
  56. இருந்து உருண்டு வந்த மாவை இறக்கி வைக்கவும்
  57. சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  58. ஏற்கனவே இட்லி பாத்திரத்தில் வேக வைத்து உதிர்த்த மாவை எடுத்துக் கொள்ளவும்
  59. அரிசி மாவு கலவையை சொப்பு போல் செய்து அதன் நடுவில் இந்த அடை மாவை வைத்து மூடவும்
  60. இட்லி பாத்திரத்தில் இரண்டு நிமிடம் வேக வைத்து எடுத்தால் கொழுக்கட்டை தயார்
  61. சூடான சுவையான வித்தியாசமான அடை கொழுக்கட்டை தயார்
  62. பருப்பு உருண்டை மோர்க்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
  63. ஏற்கனவே இட்லி பாத்திரத்தில் வேக வைத்து உதிர்த்த மாவை எடுத்து கொள்ளவும்
  64. வேண்டுமெனில் அதில் சிறிது வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  65. சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்
  66. மிக்ஸியில் தேங்காய் சீரகம் பச்சைமிளகாய் ஊறவைத்த துவரம் பருப்பு சிறிது கொத்தமல்லி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  67. அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் இட்டு சிறிது உப்பும் சேர்த்து இந்த உருண்டைகளை சேர்த்து கொதிக்கவிடவும்
  68. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளிக்கவும்
  69. ஒரு கொதி வந்தவுடன் இந்த மோர் குழம்பு அணைத்து விடவும்
  70. அணைத்த பிறகு சிறிது புளித்த மோர் சேர்த்து கலக்கவும்
  71. சூடான பருப்பு உருண்டை மோர்க்குழம்பு தயார்
  72. பருப்புருண்டை வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
  73. ஏற்கனவே இட்லி பாத்திரத்தில் வேக வைத்து உதிர்த்த எடுத்துக்கொள்ளவும்
  74. அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிசையவும்
  75. அவற்றை உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்
  76. அடுப்பில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் சிறிது கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு தாளிக்கவும்
  77. மற்றும் பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து புளி தண்ணீரை அதில் ஊற்றவும்
  78. ஒரு கொதி வந்தவுடன் அதில் சிறிது சாம்பார் பொடியை சேர்க்கவும்
  79. உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  80. சிறிது பச்சை வாசனை சென்றவுடன் உருட்டி வைத்த உருண்டைகளை குழம்பில் போடவும்
  81. குழம்பு நன்றாக கொதி வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும்
  82. மிகவும் ரசனையான பருப்பு உருண்டை குழம்பு தயார்
  83. அடை செய்வதற்கு தேவையான பொருட்கள்
  84. ஏற்கனவே அரைத்து வைத்த மாவில் சிறிது தேங்காய் அல்லது வெங்காயமும் சேர்த்து கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்
  85. மாவை நன்றாக கலக்கவும்
  86. அடுப்பில் தோசை கல்லை போட்டு அதில் மாவை ஊற்றி நடுவில் ஒரு குழி இடவும்
  87. சுற்றிலும் நடுவிலும் தேங்காய் எண்ணையை ஊற்றவும்
  88. ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போடவும்
  89. நன்றாக மறுபக்கம் வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்
  90. சூடான சுவையான அடை தயார்
  91. 9 ரெசிபிகளையும் ஒரே மாவில் செய்யலாம்
  92. அதற்காகவே இந்த பதிவு

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்