வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ வடை

Photo of Vaalaippu vadai by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
0
0
0(0)
0

வாழைப்பூ வடை

Dec-18-2018
ஜெயசித்ரா ஜெயகுமார்
2880 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ வடை செய்முறை பற்றி

பருப்புவடை மசால்வடை ன்னு பலபெயரில் சொல்லுவோம் நான் சுண்டல் பச்சைபயறில் செய்கின்றேன் சாதாரணமாக ஊறவைத்து இல்லாமல் மதிப்புகூட்டி கூடுதல் சத்துடன் முளைக்ககட்டி கூடுதலாக வாழைப்பூ சேர்த்துள்ளேன் உணவில் கட்டாயம் வாரத்தில் ஒருநாள் எங்கள்வீட்டில் வாழைப்பூ ஏதாவது ஒருவகையில் சேர்த்துக்கொள்வோம்

செய்முறை டாக்ஸ்

 • మీడియం/మధ్యస్థ
 • పండుగలాగా
 • తమిళనాడు
 • వేయించేవి
 • చిరు తిండి
 • పీచుపదార్థాలు ఘనంగా ఉన్నవి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. சிவப்பு சுண்டல் 150 Gm
 2. பாசிப்பயறு 150Gm
 3. வாழைப்பூ நறுக்கியது 1கப்
 4. வெங்காயம் நறுக்கியது 1கப்
 5. பச்சை மிளகாய் 5
 6. பூண்டு 5
 7. இஞ்சி 1துண்டு
 8. மல்லி புதினா கருவேப்பிலை
 9. பெருங்காயதூள் 1/2ஸ்பூன்
 10. சோம்பு 2ஸ்பூன்
 11. கரம்மசால் தூள்1ஸ்பூன்
 12. உப்பு
 13. எண்ணைய் 1/2L
 14. தேங்காய் 2துண்டு

வழிமுறைகள்

 1. சுண்டல் பாசிப்பயறு இரண்டையும் தனிதனியாக ஊறவைத்து நீரைவடித்துவிட்டு துணியில் கட்டி இரண்டுநாள் வைத்து முளைவிட்டதை கொறகொறப்பாக அரைத்துக்கொள்ளவும்
 2. வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிவைக்கவும் அதுபோல் மிளகாய் இஞ்சி பூண்டு தேங்காய் பொடியாக நறுக்கி வைக்கவும்
 3. அரைத்த மாவுடன் உப்பு சோம்பு பெருங்காயதூள் கரம்மசால் நறுக்கிய இஞ்சி பூண்டு தேங்காய் வெங்காயம் மல்லி புதினா கருவேப்பிலை சேர்த்து பிசைந்து வைக்கவும்
 4. வடைசட்டியில் எண்ணையை ஊற்றி கொதிக்கவைத்து வடையை தட்டி போட்டு குறைந்த தீயில் வேகவிட்டு எடுக்கவும் சூடான முளைக்கட்டியபயறு வாழைப்பூவடை ரெடி
 5. இந்த உருண்டையை வேகவைத்து காரகுழம்பில் போட்டால் குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்