வீடு / சமையல் குறிப்பு / பருப்பு கிண்ணங்களில் பச்சைபயறு சுண்டல்

Photo of Lentil Cups with Greengram Sundal by Sowmya Sundar at BetterButter
377
0
0.0(0)
0

பருப்பு கிண்ணங்களில் பச்சைபயறு சுண்டல்

Dec-18-2018
Sowmya Sundar
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பருப்பு கிண்ணங்களில் பச்சைபயறு சுண்டல் செய்முறை பற்றி

கடலைப் பருப்பை அரைத்து கிண்ணம் போல் மொறுமொறுப்பாக செய்து அதில் பச்சை பயிறு சுண்டல் வைத்து கொடுக்கும் பதார்த்தம் இது. கிண்ணத்தோடு சாப்பிடுவது வித்தி்யாசமான சுவை மற்றும் அனுபவம் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஃப்யூஷன்
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பருப்பு கிண்ணம் செய்ய
  2. கடலைபருப்பு 1/2 கப்
  3. பச்சரிசி 1 டேபிள் ஸ்பூன்
  4. அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன்
  5. மிளகாய் வற்றல் 2
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் 1/4 கப்
  8. சுண்டல் செய்ய :
  9. பச்சைபயறு 1/2 கப்
  10. தேங்காய் துருவல் 1 டேபிள் ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. மிளகு தூள் 1/2 டீஸ்பூன்
  13. எண்ணெய் 1 டீஸ்பூன்
  14. கடுகு ,உளுத்தம் பருப்பு தலா 1/2 டீஸ்பூன்
  15. கறிவேப்பிலை சிறிதளவு
  16. எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பச்சைபயிறை தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைத்து குக்கரில் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து வடித்து தனியே வைத்து கொள்ளவும்
  2. கடலைப்பருப்பு மற்றும் பச்சரிசியை சேர்த்து தண்ணீர் விட்டு இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்
  3. பின் பருப்பில் தண்ணீர் முழுவதும் வடித்துவிட்டு மிளகாய் வற்றல் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
  4. அரைத்த மாவில் உப்பு, அரிசி மாவு சேர்த்து கலந்து பிசைந்து கொள்ளவும்
  5. ஆப்ப சட்டியில் எண்ணெய் தடவி அதில் அரைத்த மாவை வைத்து அழுத்தி கிண்ணம் போல் குழி செய்து கொள்ளவும் . அதன் மேல் சிறிதளவு எண்ணெய் விடவும்
  6. அடுப்பை ஆன் செய்து சட்டியை மூடி மிதமான தீயில் வேக வைத்து கொள்ளவும். மூடி வைத்தால் தான் உட்புறமும் சீக்கிரம் வேகும்
  7. வெந்ததும் எடுத்து கொள்ளவும் .இது வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே சாஃப்ட்டாகவும் இருக்கும்.
  8. பருப்பு கிண்ணங்கள் தயார்.
  9. பச்சை பயறு சுண்டல் செய்ய கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு , கறிவேப்பிலை தாளித்து வெந்த பச்சைபயறு மற்றும் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்
  10. மிளகு தூள் , எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும். ஸ்டஃப் செய்ய சுண்டல் தயார்
  11. பருப்பு கிண்ணத்தில் பயறு சுண்டலை வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்