வீடு / சமையல் குறிப்பு / கொண்டைக்கடலை ஊறுகாய்

Photo of Chickpeas pickle by Menaga Sathia at BetterButter
436
0
0.0(0)
0

கொண்டைக்கடலை ஊறுகாய்

Dec-18-2018
Menaga Sathia
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

கொண்டைக்கடலை ஊறுகாய் செய்முறை பற்றி

இந்த சுவையான ரெசிபியை கைமணம் நிகழ்ச்சியில் பார்த்து செய்தது.மிகவும் சுவையாகவும் இருந்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • கண்டிமென்ட்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. கொண்டைக்கடலை -1 கப்
  2. மாங்காய் -1
  3. உப்பு -சுவைக்கு
  4. நல்லெண்ணெய்-1/4 கப்
  5. கடுகு பொடி -1/2 டீஸ்பூன்
  6. வறுத்த வெந்தயபொடி -1/2 டீஸ்பூன்
  7. வரமிளகாய்தூள் -2 டேபிள்ஸ்பூன்
  8. பெருங்காயபொடி-1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொண்டகடலயை முதல்நாள் இரவு அல்லது 8 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.
  2. பின் ஈரம் போக துணியில் நன்றாக உலர்த்தவும்.
  3. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடலையை சேர்த்து நன்றாக வதக்கவும்.இதுதான் மிக முக்கியமானது.அப்பொழுது தான் கடலை வேகும்.
  4. பின் நறுக்கிய மாங்காய் சேர்த்து மேலும் 5நிமிடங்கள் வதக்கவும்.
  5. பின் உப்பு,பெருங்காயபொடி, கடுகுபொடி,மிளகாய்தூள், வெந்தயபொடி சேர்க்கவும்.
  6. நன்றாக 5நிமிடங்கள் கிளறிய பின் இறக்கி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்