வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் கோலா உருண்டை

Photo of Beetroot kola urundai by Priya Tharshini at BetterButter
536
0
0.0(0)
0

பீட்ரூட் கோலா உருண்டை

Dec-19-2018
Priya Tharshini
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் கோலா உருண்டை செய்முறை பற்றி

பீட்ரூட் மற்றும் பருப்பு வைத்து செய்யப்படும் கோலா உருண்டை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துவரம் பருப்பு - 1/4 கப்
  2. கடலை பருப்பு - 1/4 கப்
  3. வெங்காயம் - 1/4 கப் நறுக்கியது
  4. பூண்டு - 4 பள்
  5. சோம்பு - 1 தேக்கரண்டி
  6. சீரகம் - 1 தேக்கரண்டி
  7. உப்பு - 1 தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  9. வி. மிளகாய் - 2
  10. தேங்காய் துருவல் - 1/4 கப்
  11. பீட்ரூட் துருவல் - 1 கப்
  12. பொட்டுக் கடலை - 2 மேசைக்கரண்டி
  13. எண்ணெய் - தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பு இரண்டையும் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. தண்ணீரை மழுவதும் வடித்து பருப்பை மிக்ஸியில் போட்டு உப்பு , மஞ்சள் தூள் சேர்த்து கோரகோர வென்று அரைக்கவும்.
  3. மிக்ஸியில் வெங்காயம்,வி.மிளகாய்,சோம்பு,சீரகம்,பூண்டு சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும்.
  4. அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  5. பொட்டு கடலை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
  6. பாத்திரத்தில் அரைத்த பருப்பு,வெங்காயம் விழுது , துருவின பீட்ரூட் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
  7. பொடித்த பொட்டுக்கடலை அத்துடன் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
  8. சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
  9. எண்ணெய் சூடானதும் உருண்டைகளை பொறிக்கவும்.
  10. ஓசை அடங்கியதும் பொறித்த உருண்டைகளை எடுக்கவும்.
  11. பீட்ரூட் கோலா உரூண்டை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்