Photo of Somaas by Wahida Abdul Hameed at BetterButter
1021
0
0.0(0)
0

சோமாஸ்

Dec-19-2018
Wahida Abdul Hameed
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சோமாஸ் செய்முறை பற்றி

செய்வதற்கு மிக சுலபமான, பண்டிகை காலங்களில் விரும்பி உண்ணக்கூடிய சோமாஸ்.

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உடைத்த கடலை ½ கப்
  2. சர்க்கரை ½ கப்
  3. மைதா மாவு 1 கப்
  4. கோதுமை மாவு ¼ கப்
  5. ஏலக்காய் 5
  6. நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  7. உப்பு ஒரு சிட்டிகை
  8. கடலை எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதா மாவு கோதுமை மாவு உப்பு நெய் சேர்க்கவும்.
  2. அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
  3. உடைத்த கடலை மற்றும் சர்க்கரையை கலந்து தனியே எடுத்து வைக்கவும்.
  4. மிக்ஸியில் உடைத்த கடலை சர்க்கரை ஏலக்காய்த்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக பொடித்துக் கொள்ளவும்.
  5. தேங்காய் துருவலை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, பொடித்த உடைத்த கடலை, சர்க்கரை கலவையுடன் சேர்த்து கலந்து வைக்கவும்.
  6. மாவை சப்பாத்தி போல் திரட்டி நடுவில் பூரணத்தை வைக்கவும்.
  7. மற்றொரு பகுதியை எடுத்து மூடவும்.
  8. ஓரத்தை கைகளால் உருட்டி உருட்டி பொருளும் வெளியே போகாதவாறு அடைக்கவும். சோமஸ் அச்சு இருந்தால் அதனை பயன் படுத்தலாம்.
  9. இதனை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும். சுவையான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் சோமாஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்