வீடு / சமையல் குறிப்பு / பருப்பு வடை

Photo of Parupu vada by sudha rani at BetterButter
102
0
0(0)
0

பருப்பு வடை

Dec-19-2018
sudha rani
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

பருப்பு வடை செய்முறை பற்றி

எவ்வளவு நேரம் ஆனாலும் இந்த வடை மொறு மொறுப்பாகவே இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. வடபருப்பு 1/2 கிலோ
  2. பச்சை மிளகாய் 4
  3. கறிவேப்பிலை சிறிது
  4. கொத்தமல்லி தழை சிறிது
  5. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  6. நறுக்கிய சின்ன வெங்காயம் 1/4 கிலோ
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. வடபருப்பை சுமார் ஒரு இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. ஊறிய பருப்பில் இருந்து தனியாக ஒரு 2 கை அளவு எடுத்து வைக்கவும்
  3. பின் நறுக்கிய பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
  4. பின் வடபருப்பை சிறிது சிறிதாக போட்டு சிறிதும் தண்ணீர் இல்லாமல் கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
  5. அதனுடன் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை உப்பு இஞ்சி பூண்டு விழுது மற்றும் தனியாக எடுத்து வைத்த பருப்பு சேர்க்கவும்
  6. பின் நன்கு பிசைந்து கொள்ளவும்
  7. பின் சூடான எண்ணெயில் உருண்டை பிடித்து உள்ளங்கையில் வைத்து லேசாக தட்டி போடவும்
  8. எண்ணெய் சலசலப்பு அடங்கி நன்கு சிவந்து வந்ததும் எடுக்கவும்
  9. சூடான மொரு மொருப்பான வடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்