வீடு / சமையல் குறிப்பு / கருப்பு முழுஉளுந்து இட்லி பொடி

Photo of Black Whole Uraddal Idly Podi by Sowmya Sundar at BetterButter
906
0
0.0(0)
0

கருப்பு முழுஉளுந்து இட்லி பொடி

Dec-19-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கருப்பு முழுஉளுந்து இட்லி பொடி செய்முறை பற்றி

மிகவும் சத்து நிறைந்த முழு கருப்பு உளுந்தில் செய்த இட்லி மிளகாய் பொடி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்லெண்டிங்
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கறுப்பு முழு உளுந்து ஒரு கப்
  2. முழு வெள்ளை உளுந்து 1 டேபிள் ஸ்பூன்
  3. கடலைப்பருப்பு அரை கப்
  4. பொட்டுகடலை கால் கப்
  5. கருப்பு எள் கால் கப்
  6. மிளகாய் வற்றல் 2 கப்
  7. கடுகு 1 டீஸ்பூன்
  8. வெந்தயம் 1/8 டீஸ்பூன்
  9. பெருங்காயம் 1/2 டீஸ்பூன்
  10. வெல்லம் 1 துண்டு
  11. உப்பு தேவையான அளவு
  12. நல்லெண்ணெய் 1 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெறும் வாணலியில் முதலில் எள்ளை சேர்த்து வெடிக்க விட்டு தனியே எடுத்துக் கொள்ளவும்
  2. பின் அதே வாணலியில் 1/8 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கருப்பு முழு உளுந்து, வெள்ளை உளுந்து சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும். சிவப்பாக ஆவது தெரிவதற்கு தான் சிறிது வெள்ளை உளுந்து சேர்க்கிறோம்
  3. பின் மேலும் 1/8 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடலை பருப்பை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
  4. கடுகு , வெந்தயம் சேர்த்து வறுத்து கொள்ளவும்
  5. மறுபடியும் 1/8 டீஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை உப்பு சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  6. நன்கு ஆறியதும் எள்,வெல்லம் தவிர அனைத்தையும் சேர்த்து கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.பின் கடைசியில் எள் மற்றும் வெல்லம் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்
  7. சத்தான சுவையான முழு கருப்பு உளுந்து இட்லி பொடி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்