வீடு / சமையல் குறிப்பு / வடை குழம்பு

Photo of Vadai kulampu by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
511
0
0.0(0)
0

வடை குழம்பு

Dec-19-2018
ஜெயசித்ரா ஜெயகுமார்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

வடை குழம்பு செய்முறை பற்றி

வடைகுழம்பு சென்னை பேமஸ் வடகறிதான் காரகுழம்பு வச்சி 10வடைய வாங்கி பக்கத்துவிட்டு ஆச்சி பிச்சு போட்டு கொதிக்கவச்சு கொடுத்து திதிடீர் குழம்புன்னு சொல்லி சாப்பிட சொல்லியதை நான் என்கைபக்குவத்தில் செய்தேன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. க.பருப்பு 1/4கி
  2. து.பருப்பு 10ogm
  3. வெங்காயம் 3
  4. பச்சை மிளகாய் 4
  5. பூண்டு 10
  6. இஞ்சி 1துண்டு
  7. தேங்காய் துறுவல்1கப்
  8. சோம்பு தூள்2ஸ்பூண்
  9. மிளகாய் தூள்2ஸ்பூண்
  10. பட்டை ஏலம் இலை
  11. மல்லி கருவேப்பிலை
  12. தக்காளி சாறு1கப்
  13. எண்ணைய் 1/2லி
  14. கடுகு
  15. உப்பு
  16. பெருங்காயதூள்

வழிமுறைகள்

  1. க.ருப்பு து.பருப்பு ரெண்டையும் 1மணிநேரம் ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்
  2. வெங்காயம் மிளகாயை நறுக்கி பாதியை அரைத்தபருப்போடு சேர்த்து உப்பு பூண்டு இஞ்சி தேங்காய் துருவல் பெருங்காயம் 1ஸ்பூண் மிளகாய் சோம்பு தூள்சேர்த்து பிசரிவைக்கவும்
  3. சட்டியில் எண்ணையை சூடாக்கி அதில் பிசரிய மாவை உதிர் உதிராக வறுத்து எடுக்கவும்
  4. பொரித்த உதிர்வடையை தனியாக ஆறவிடவும்
  5. தவாவில் நிறைய பொரித்த எண்ணைய் விட்டு கடுகு பட்டைஏலம் இலை போட்டு மீதி வெங்காயம் மிளகாய் பூண்டு இஞ்சி தக்காளி சாறு சோம்பு மிளகாய் தூள் உப்பு மல்லி கருவேப்பிலை சேர்த்து கொதிக்கவிடவும் அதில் வறுத்த தூள்வடையை போடவும் பத்து நிமிசம் குறைந்த தீயில் வேகவிட்டு இறக்கம் சுவையான வடைகுழம்பு தயார்
  6. இது இட்டலி தோசை தயிர் சாதத்துக்கு ஏற்றது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்