Photo of Seeralam by Menaga Sathia at BetterButter
448
0
0.0(0)
0

சீராளம்

Dec-19-2018
Menaga Sathia
130 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சீராளம் செய்முறை பற்றி

மாலை நேரத்தில் செய்யகூடிய சத்தான ஸ்நாக்ஸ் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துவரம்பருப்பு -1/2 கப்
  2. பாசிபருப்பு -1/2 கப்
  3. கடலைபருப்பு -1/2 கப்
  4. வெள்ளை முழு உளுந்து-1/2 கப்
  5. காய்ந்த மிளகாய்-2
  6. உப்பு -சுவைக்கு
  7. பொடியாக நறுக்கிய வெங்காயம்-1
  8. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்-2
  9. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை -2 டேபிள்ஸ்பூன்
  10. தேங்காய்துறுவல் -1/4 கப்
  11. தாளிக்க:
  12. கடுகு -1/4 டீஸ்பூன்
  13. உளுத்தம் பருப்பு-1/4 டீஸ்பூன்
  14. கறிவேப்பிலை-1 ஈர்க்கு
  15. பெருங்காயபொடி-1/8 டீஸ்பூன்
  16. எண்ணெய்-1 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. நான்கு பருப்புகளையும் தனித்தனியாக 2மணிநேரம் ஊறவைக்கவும்.
  2. முதலில் உளுந்தினை நன்கு மைய அரைக்கவும்.கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
  3. துவரம் பருப்பு, பாசிபருப்பு இவற்றை நைசாக அரைக்கவும்.
  4. அனைத்தையும் உப்பு,வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து கலக்கவும்.மாவு பதம் கெட்டியாக இருக்கவேண்டும்.
  5. இட்லி பாத்திரத்தில் இட்லி போல ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
  6. வெந்ததும் எடுத்து ஆறியபின் துண்டுகள் போடவும்.
  7. பின் கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெட்டிய துண்டுகளை சேர்த்து பிரட்டி தேங்காய்துறுவல் சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்