வீடு / சமையல் குறிப்பு / பருப்பு போளி / ஒப்பட்டு

Photo of Paruppu Poli / obattu by Priya Tharshini at BetterButter
528
1
0.0(0)
0

பருப்பு போளி / ஒப்பட்டு

Dec-20-2018
Priya Tharshini
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பருப்பு போளி / ஒப்பட்டு செய்முறை பற்றி

கடலை பருப்பு பூரணத்தை வைத்து செய்யப்படும் போளி வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • சௌத்இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா - 1 கப்
  2. கடலை பருப்பு - 3/4 கப்
  3. தேங்காய் துருவல் - 1/4 கப்
  4. வெல்லம் - 3/4 கப்
  5. ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  7. எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
  8. நெய் - தேவைக்கு
  9. உப்பு - 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் மைதா, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 3 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்துக் கொள்ளவும்.
  2. பிறகு 2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து 2 மணி நேரம் ஊற விடவும்.
  3. கடலை பருப்பை வாணலியில் சேர்த்து 5 நிமிடம் வருக்கவும்.
  4. வருத்த பருப்பை தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
  5. பிறகு தேவைக்கு ஏற்ப குறைந்த தண்ணீர் சேர்த்து 2 விசில் வேகவிடவும். பருப்பு குழைய கூடாது. கையால் உடைத்தால் உடையும் பதம் வரை வேகவிடவும்.
  6. வடித்த பருப்பு , வெல்லம் , ஏலக்காய் தூள் சேர்த்து பல்ஸ் மோடில் அரைக்கவும். பிறகு தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
  7. அரைத்த பூரணத்தை பாத்திரத்தில் மாற்றவும்.
  8. மேல் மாவு , பூரணம் இரண்டயும் உறுண்டைகளாக பிரிக்கவும்.
  9. மேல் மாவை கையால் எண்ணெய் தோட்டு தட்டி பூரணத்தை நடுவில் வைக்கவும்.
  10. மேல் மாவை இழுத்து பூரணத்தை மூடவும்.
  11. கையால் எண்ணெய் தோட்டு தட்டி சப்பாத்தி போல் தட்டவும்.
  12. தோசை கல்லில் போளியை நெய் விட்டு 2 பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.
  13. பொன் நிறமாக ஆனதும் போளியை அடுப்பில் இருந்து எடுக்கவும்.
  14. பருப்பு போளி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்