வீடு / சமையல் குறிப்பு / தால் ரொட்டி

Photo of Dhal roti by kamala shankari at BetterButter
193
0
0.0(0)
0

தால் ரொட்டி

Dec-20-2018
kamala shankari
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தால் ரொட்டி செய்முறை பற்றி

வித்தியாசமான சுவையான இரவு உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை அரை கப்
  2. கேரட் துருவல் அரை கப்
  3. பாசிப் பருப்பு ஒரு தேக்கரண்டி
  4. பச்சைப்பயறு ஒரு தேக்கரண்டி
  5. கொள்ளு ஒரு தேக்கரண்டி
  6. ராஜ்மா ஒரு தேக்கரண்டி
  7. தட்டைப்பயிறு ஒரு தேக்கரண்டி
  8. கொண்டக்கடலை ஒரு தேக்கரண்டி
  9. பச்சைமிளகாய்-2
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. தண்ணீர் 3 கப்

வழிமுறைகள்

  1. அனைத்து பெயர்களையும் லேசாக வாசம் வரும் வரை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்
  2. ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடித்து கொள்ளவும்
  3. ரவை மற்றும் பருப்புகளை சேர்த்து ஒரு கப் இருக்க வேண்டும்
  4. வாணலியில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்
  5. தண்ணீர் கொதித்தவுடன் உப்பு தேங்காய் துருவல் பச்சை மிளகாய் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கிளறவும்
  6. தண்ணீர் நன்கு கொதிக்கும் பொழுது ரவை மற்றும் பருப்பு கலவையை கட்டி இல்லாமல் நன்கு கிண்டவும்
  7. நன்கு கெட்டியானவுடன் ஆறவிடவும்
  8. கோதுமை மாவு சேர்த்து சிறுசிறு சப்பாத்தி உருண்டை களைப் போல் பிடித்துக் கொள்ளவும்
  9. ஒரு பிலாஸ்டிக் பேப்பரில் எண்ணெய் தடவி அதன் மேல் லேசாக ரொட்டி அடை போல் தட்டவும்
  10. தோசைக்கல்லை சூடாக்கி அதன் மேல் ரொட்டியை இருபுறமும் வேக வைக்க வேண்டும்
  11. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்