வீடு / சமையல் குறிப்பு / உளுந்து வடை

Photo of Ulundhu vadai by Rabia Hamnah at BetterButter
0
1
0(0)
0

உளுந்து வடை

Dec-22-2018
Rabia Hamnah
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உளுந்து வடை செய்முறை பற்றி

வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவார்கள் இதை கடையில் வாங்குவதை விட வீட்டில் நாம் சுத்தமாக எளிதில் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • భారతీయ
 • వేయించేవి
 • చిరు తిండి
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. உளுந்து 200 கிராம்
 2. பெரிய வெங்காயம் ஒன்று
 3. பச்சை மிளகாய் 2 நறுக்கியது
 4. கறிவேப்பிலை இரண்டு கொத்து நறுக்கியது
 5. கொத்தமல்லி இலை கொஞ்சம் நறுக்கியது
 6. மிளகு 2 ஸ்பூன்
 7. உப்பு தேவைக்கு
 8. எண்ணெய் பொரிக்க
 9. சேமியா 2ஸ்பூன் நைசாக பொடித்தது

வழிமுறைகள்

 1. உளுந்தை 2 -4மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
 2. ஊறிய உளுந்தை தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்
 3. தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும் தேவைப்பட்டால் சிறிது தெளித்து தெளித்து அரைக்கவும்
 4. அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம் ,நறுக்கிய பச்சை மிளகாய் ,கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, மிளகு, துருவிய இஞ்சி சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
 5. பின்பு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும் சேமியாவை தூள் செய்து அதனுடன் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்
 6. எண்ணெயை நன்கு காய வைக்கவும்
 7. கையை தண்ணீரில் முக்கி பின்பு சிறிது மாவை எடுத்து நன்றாக உருட்டி பெருவிரலை வைத்து நடுவில் குழியிட்டு எண்ணெயில் சேர்த்து பொரிக்கவும்
 8. கைகளில் செய்ய தெரியவில்லை என்றால் ஒரு இலையில் சிறிது எண்ணை தேய்த்து விட்டு அதில் மாவை வைத்து தட்டி நடுவில் ஓட்டை இட்டு பொரித்தெடுக்கவும்
 9. மிதமான தீயில் வைத்து நன்கு பொரியும் வரை அவ்வப்போது பிரட்டி விட்டு பொரித்து எடுக்கவும் சுவையான உளுந்து வடை தயார்
 10. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உளுந்து வடையை தாராளமாக சாப்பிடலாம்
 11. தேங்காய் சட்னியுடன் பரிமாற சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்