வீடு / சமையல் குறிப்பு / ராகி களி மற்றும் தக்காளி பருப்பு

Photo of Ragi kali and tomoto dal by sudha rani at BetterButter
498
0
0.0(0)
0

ராகி களி மற்றும் தக்காளி பருப்பு

Dec-22-2018
sudha rani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ராகி களி மற்றும் தக்காளி பருப்பு செய்முறை பற்றி

வாரத்தின் ஏழு நாட்களில் ஏதாவது ஒரு நாள் ஒரு நேரம் கட்டாயம் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ராகி களி செய்ய:
  2. ராகி மாவு 1/4 கிலோ
  3. சோள அரிசி அல்லது ஏதாவது சிறுதானிய அரிசி 100 கிராம்
  4. உப்பு தேவையான அளவு
  5. நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
  6. தக்காளி பருப்பு செய்ய:
  7. துவரம் பருப்பு 1 கப்
  8. சின்ன வெங்காயம் 100 கிராம்
  9. தக்காளி 8
  10. உப்பு தேவையான அளவு
  11. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  12. மல்லித்தூள் 1 ஸ்பூன்
  13. சீரகத்தூள் 1 ஸ்பூன்
  14. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  15. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  16. வரமிளகாய் 2
  17. கடுகு 1 ஸ்பூன்
  18. சீரகம் 1/4 ஸ்பூன்
  19. கறிவேப்பிலை சிறிது
  20. கொத்தமல்லி தழை
  21. எண்ணெய்
  22. நெய் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ராகி களி செய்முறை:
  2. சோள அரிசியை 15 நிமிடங்கள் வரை ஊறவிட்டு பின் குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 4 விசில் வந்ததும் இறக்கவும்
  3. பின் குக்கரை திறந்து வெந்த சாதத்தை நன்கு மத்தால் மசித்து விடவும்
  4. பின் கொதிக்கும் நீரில் குளிர்ந்த நீரில் கட்டியில்லாமல் கலந்த ராகி மாவை சேர்த்து நன்கு கிளறவும்
  5. பக்கத்தில் கொதிக்கும் நீரை ரெடியாக வைத்து கொள்ளவும்
  6. மாவு நன்கு வெந்ததும் மசித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்
  7. தேவைப்பட்டால் சிறிது சிறிதாக கொதிக்கும் நீரை சேர்த்து நன்கு கிளறவும்
  8. பின் களியை உருட்டி வைக்கவும்
  9. தக்காளி பருப்பு செய்ய:
  10. துவரம் பருப்புடன் எண்ணெய் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்
  11. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் கறிவேப்பிலை வரமிளகாய் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  12. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும்
  13. பின் தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  14. பின் சீரகத்தூள் மல்லித்தூள் சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்
  15. தக்காளி நன்கு கரைந்து சுண்டி வந்ததும் வெந்த பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  16. தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் மற்றும் கொத்தமல்லி தழை தூவி நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்
  17. இறக்கிய பருப்பில் நெய் பரவலாக ஊற்றி மூடி வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்