வீடு / சமையல் குறிப்பு / முளைக்கட்டிய பயறு கூட்டு

Photo of Sprouted grain kootu by kamala shankari at BetterButter
200
0
0.0(0)
0

முளைக்கட்டிய பயறு கூட்டு

Dec-22-2018
kamala shankari
1440 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முளைக்கட்டிய பயறு கூட்டு செய்முறை பற்றி

முளைகட்டிய பயறு வகை கலவை மற்றும் பருப்பு தேங்காய் மூலம் இது ஒரு முழு இரும்புச்சத்து கூட்டாக அமையும் பெண்களுக்கு ஏற்ற உணவாகும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சை பயிறு ஒரு கப்
  2. கொள்ளு ஒரு கப்
  3. காராமணி ஒரு கப்
  4. பாசிப்பருப்பு கால் கப்
  5. சின்ன வெங்காயம் 10
  6. தக்காளி 2 பொடியாக நறுக்கவும்
  7. துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன்
  8. சாம்பார் பொடி ஒரு டீஸ்பூன்
  9. கறிவேப்பில்லை கொத்தமல்லி சிறிது
  10. எண்ணெய் உப்பு தேவையான அளவு
  11. அரைக்க தேவையானவை:
  12. தேங்காய்த்துருவல் ஒரு தேக்கரண்டி
  13. பச்சை மிளகாய் ஒன்று
  14. சீரகம் கால் டீஸ்பூன்
  15. தாளிக்க தேவையானவை:
  16. கடுகு உளுந்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
  17. சீரகம் ஒரு தேக்கரண்டி
  18. கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி
  19. காயம் ஒரு தேக்கரண்டி
  20. காய்ந்த மிளகாய் ஒன்று

வழிமுறைகள்

  1. பயறுகளை முந்தைய நாள் ஊறவைத்து முளைகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  2. குக்கரில் பருப்புடன் பயறு கலவை சேர்த்து தண்ணீர் விட்டு மூடி 2 விசில் விட்டு இறக்கவும்
  3. அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைக்கவும்
  4. வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்
  5. அதனுடன் வெங்காயம் தக்காளி இஞ்சி துருவல் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்
  6. வேகவைத்த கலவை அரைத்த விழுது உப்பு கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்