வீடு / சமையல் குறிப்பு / உளுந்தம்பருப்பு துவையல்

Photo of Orid dhall dhuvaiyal by ஜெயசித்ரா ஜெயகுமார் at BetterButter
269
0
0.0(0)
0

உளுந்தம்பருப்பு துவையல்

Dec-22-2018
ஜெயசித்ரா ஜெயகுமார்
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

உளுந்தம்பருப்பு துவையல் செய்முறை பற்றி

எலும்புக்கு ஏதாவது ஒருவகையில் சத்து தேவை அது உளுந்தம்பருப்பில் அதிகம் உள்ளது அதனால் ஏதாவது வகையில் உளுந்துசமையல் இருக்கும் இன்று லெமன் சாததுக்கு தொட்டுக்க இந்த துவையல் இப்ப மிக்சியில் தான் அரைத்தேன் அம்மாவீட்டில் அம்மியில் அரைக்கும்போது அம்மியை சுற்றிதம்பி தங்கைகள் அமர்ந்துகொண்டு எடுத்துஎடுத்து சாப்பிட்டு காலிசெய்துடுவர் அதுபோல் இன்றும் அரைத்துவைத்துவிட்டு வந்துவிட்டேன் சாப்பிடபோகும்போது பார்த்தேன் போட்டோவுக்கு இவ்வளவே மிஞ்சியது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உளுந்தம்பருப்பு1கப்
  2. தேங்காய் துறுவல்1கப்
  3. மிளகாய் வத்தல் 6
  4. புளிசிறிது
  5. உப்பு
  6. பூண்டு 6பல்
  7. கருவேப்பிலை கைபிடி
  8. எண்ணைய் 1கரண்டி

வழிமுறைகள்

  1. தவாவில் எண்ணைய் விட்டு முதலில் உளுந்தை சிவக்க வறுக்கவும்
  2. அடுத்து தேங்காயை வறுக்கவும்
  3. கருவேப்பிலை வத்தல் பூண்டு புளி உப்பு சேர்த்து வறுத்து ஆறவிடவும்
  4. ஆறியதும் அனைத்தையும் மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும் பிறகு சிறிது சிறிதாக தண்ணி சேர்த்து துவையல் பதத்திற்கு அரைத்து எடுக்கவும்
  5. விருப்பபட்டவர்கள் அம்மியில் கூட அரைத்து கொள்ளலாம்
  6. இந்த துவையல் பிக்னிக் செல்லும்போது தயிர் லெமன் புளியோதரை சாதம் இட்டிலிக்கு ஏற்றது
  7. தேங்காய் வறுப்பதால் கைபடாமல் வைத்தால் கெட்டுபோகாது
  8. அரைத்ததை திரும்ப எண்ணைய் விட்டு வதக்கிவைத்தால் நல்லது
  9. தண்ணீர் கலந்து தாளித்து வைத்தால் இட்டலி தோசைக்கு சூப்பரோ சூப்பர் சட்டினி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்