வீடு / சமையல் குறிப்பு / ரகடா பேட்டீஸ்

Photo of Ragda Patties by Pavithra Prasad at BetterButter
444
0
0.0(0)
0

ரகடா பேட்டீஸ்

Dec-22-2018
Pavithra Prasad
495 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரகடா பேட்டீஸ் செய்முறை பற்றி

ஒரு சுவையான மகாராஷ்டிரா ,குஜராத் மாநிலங்களில் உள்ள சாட்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • நார்த் இந்தியன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரகடா உண்டாக்க தேவையான பொருட்கள்
  2. வெள்ளை கொண்டைக்கடலை ஒரு கப்
  3. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  4. மிளகாய் பொடி அரை மேஜைக்கரண்டி
  5. கரம் மசாலா கால் தேக்கரண்டி
  6. பெரிய வெங்காயம் சிறிதாக அறிந்தது ஒன்று
  7. உப்பு தேவையான அளவு
  8. பட்டீஸ் உண்டாக்க தேவையான பொருட்கள்
  9. நன்றாக வெந்தது உடைத்த உருளைக்கிழங்கு 2
  10. மஞ்சள் பொடி அரை தேக்கரண்டி
  11. மிளகாய் பொடி அரை மேஜைக்கரண்டி
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணெய் தேவையான அளவு
  14. பெரிய வெங்காயம் சிறிதாக அறிந்தது 1
  15. தக்காளியை சிறிதாக அறிந்ததது சிறிய ஒரு கப்
  16. கொத்தமல்லி இலை தேவையான அளவு
  17. சேவ் தேவையான அளவு
  18. கிரீன் சட்னி தேவையான அளவு
  19. இனிப்பு புளி சட்னி தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெள்ளைக் கொண்டைக்கடலையை 8 மணி நேரம் முன்தினம் ஊற வைக்கவும்
  2. கடலையை நன்றாக கழுவி குக்கரில் கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி, அரை மேசைக்கரண்டி மிளகாய் பொடி ,உப்பு தேவையான அளவு சேர்த்து , 3 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் அடித்து எடுக்கவும்
  3. கடலையை நன்றாக உடைத்து எடுத்துக் கொள்ளவும்
  4. ரக்டா தயார்
  5. நன்றாக உடைத்த கிழங்குகில் மஞ்சள் பொடி, மிளகாய்பொடி உப்பு தேவையான அளவு சேர்த்து பட்டீஸ் கலவை கட்லட் சேபில் உண்டாக்கி எடுக்கவும்
  6. பேன் சுடாக்கவும் அதில் உண்டாக்கி வைத்த பட்டீஸ் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சுட்டுக் எடுக்கவும்
  7. பட்டீஸ் தயார்
  8. இனி ஒரு பிளேட் எடுக்கவும்
  9. அதில் உண்டாக்கி வைத்த ரகடா கலவை ஊற்றவும்
  10. அதன் மேல் பட்டீஸ் வைக்கவும்
  11. அதன்மேல் ரகடா கலவை சிறிதாக ஊற்றவும்
  12. அதன்மேல் வெங்காயம், தக்காளி, சேவ் தூவவும்
  13. அதன்மேல் கிரீன் சட்னி , இனிப்பு புளி சட்னி ஊற்றி பரிமாறவும்
  14. சுவையான ரகடா பேட்டீஸ் சாட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்