தவா ப்ரை பலாபில் பேட்டீஸ் | Pan fry falafel patties in Tamil

எழுதியவர் Asiya Omar  |  23rd Dec 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Pan fry falafel patties recipe in Tamil,தவா ப்ரை பலாபில் பேட்டீஸ், Asiya Omar
தவா ப்ரை பலாபில் பேட்டீஸ்Asiya Omar
  • ஆயத்த நேரம்

    6

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

0

0

தவா ப்ரை பலாபில் பேட்டீஸ் recipe

தவா ப்ரை பலாபில் பேட்டீஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Pan fry falafel patties in Tamil )

  • ஊற வைத்து வேக வைத்த கொண்டைக்கடலை - ஒன்னரை கப்
  • ஓட்ஸ் பொடித்தது-அரை கப்
  • வெங்காயம் நறுக்கியது - கால் கப்
  • பூண்டுபல் பொடியாக நறுக்கியது -3
  • நறுக்கிய பார்ஸ்லி & கொத்தமல்லி - தலா கால் கப்
  • சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
  • மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
  • வெள்ளை எள் -4 தேக்கரண்டி
  • எலுமிச்சை ஜூஸ் -1 தேக்கரண்டி
  • எண்ணெய் -தேவைக்கு
  • உப்பு - சுவைக்கு.

தவா ப்ரை பலாபில் பேட்டீஸ் செய்வது எப்படி | How to make Pan fry falafel patties in Tamil

  1. முதலில் கொண்டைக்கடலையை 6 மணி நேரம் ஊற வைத்து ,3 விசில் வேக வைத்து எடுக்கவும். தேவையான பொருட்கள் தயாராக இருக்கட்டும். வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி,பார்ஸ்லி நறுக்கி வைக்கவும்.
  2. மிக்ஸி ஜாரில் முதலில் வெங்காயம், மல்லி,பார்ஸ்லி,பூண்டு,மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து,அத்துடன் வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து லேசாக துருவலாக இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.
  3. அத்துடன்,பொடித்த ஓட்ஸ் ,எள்ளு,சுவைக்கு சிறிது உப்பு,1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து விரவவும்.
  4. ஒரு போல் பிரட்டி விரவி உப்பு சரி பார்க்கவும் .
  5. சிறு உருண்டைகளாக பிடித்து,வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்தும் எடுக்கலாம்.
  6. தவாவில் சாலோ ப்ரை செய்தும் எடுக்கலாம்.
  7. அப்படி இல்லையெனில் பேட்டிஸ் போல் கையால் தட்டி எடுக்கவும்.
  8. தவாவில் எண்ணெய் கொஞ்சமாக விட்டு இரு புறமும் சிவற பேட்டிஸ் போல் தவா ப்ரை செய்து எடுத்தும் பரிமாறலாம்.
  9. சுவையான சூப்பரான மொறு மொறு தவா ப்ரை பலாபில் பேட்டீஸ் தயார்.

எனது டிப்:

இதனை ப்ரட் நடுவில் வைத்து சாண்ட்விச், பர்கர் பன்னில் வைத்தும் பரிமாறலாம்.

Reviews for Pan fry falafel patties in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.