வீடு / சமையல் குறிப்பு / தவா ப்ரை பலாபில் பேட்டீஸ்

Photo of Pan fry falafel patties by Asiya Omar at BetterButter
337
0
0.0(0)
0

தவா ப்ரை பலாபில் பேட்டீஸ்

Dec-23-2018
Asiya Omar
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தவா ப்ரை பலாபில் பேட்டீஸ் செய்முறை பற்றி

அரபு நாட்டின் பிரபலமான ஆரோக்கியமான ஸ்நாக்ஸ். சத்தானதும் சுவையானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • மிடில் ஈஸ்டர்ன்
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஊற வைத்து வேக வைத்த கொண்டைக்கடலை - ஒன்னரை கப்
  2. ஓட்ஸ் பொடித்தது-அரை கப்
  3. வெங்காயம் நறுக்கியது - கால் கப்
  4. பூண்டுபல் பொடியாக நறுக்கியது -3
  5. நறுக்கிய பார்ஸ்லி & கொத்தமல்லி - தலா கால் கப்
  6. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
  7. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
  8. வெள்ளை எள் -4 தேக்கரண்டி
  9. எலுமிச்சை ஜூஸ் -1 தேக்கரண்டி
  10. எண்ணெய் -தேவைக்கு
  11. உப்பு - சுவைக்கு.

வழிமுறைகள்

  1. முதலில் கொண்டைக்கடலையை 6 மணி நேரம் ஊற வைத்து ,3 விசில் வேக வைத்து எடுக்கவும். தேவையான பொருட்கள் தயாராக இருக்கட்டும். வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி,பார்ஸ்லி நறுக்கி வைக்கவும்.
  2. மிக்ஸி ஜாரில் முதலில் வெங்காயம், மல்லி,பார்ஸ்லி,பூண்டு,மிளகாய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து,அத்துடன் வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து லேசாக துருவலாக இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்.
  3. அத்துடன்,பொடித்த ஓட்ஸ் ,எள்ளு,சுவைக்கு சிறிது உப்பு,1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து விரவவும்.
  4. ஒரு போல் பிரட்டி விரவி உப்பு சரி பார்க்கவும் .
  5. சிறு உருண்டைகளாக பிடித்து,வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்தும் எடுக்கலாம்.
  6. தவாவில் சாலோ ப்ரை செய்தும் எடுக்கலாம்.
  7. அப்படி இல்லையெனில் பேட்டிஸ் போல் கையால் தட்டி எடுக்கவும்.
  8. தவாவில் எண்ணெய் கொஞ்சமாக விட்டு இரு புறமும் சிவற பேட்டிஸ் போல் தவா ப்ரை செய்து எடுத்தும் பரிமாறலாம்.
  9. சுவையான சூப்பரான மொறு மொறு தவா ப்ரை பலாபில் பேட்டீஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்