வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ பருப்பு உசிலி

Photo of VAAZHAIPPOO PARUPPUSILI by Radha Balu at BetterButter
176
0
0.0(0)
0

வாழைப்பூ பருப்பு உசிலி

Dec-23-2018
Radha Balu
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ பருப்பு உசிலி செய்முறை பற்றி

தனியே பிசைந்து சாப்பிடவும், குழம்பு ரசம் சாதங்களுக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பூ - 1
  2. துவரம்பருப்பு - 3/4 கப்
  3. கடலைப் பருப்பு - 1/4 கப்
  4. மிளகாய்வற்றல் - 8
  5. பெருங்காயப்பொடி - 1/4தேக்கரண்டி  
  6. மஞ்சள்பொடி - 1/4தேக்கரண்டி
  7. எண்ணை  - 4 தேக்கரண்டி
  8. கடுகு - 1 தேக்கரண்டி 
  9. உப்பு - தேவையான அளவு 

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை ஆய்ந்து உள்ளிருக்கும் கள்ளன் என்ற காம்புகளை ஆய்ந்து,பொடியாக நறுக்கி கறுக்காமல் இருக்க சிறிது மோர் கலந்த நீரில் போட்டு வைக்கவும். 
  2. நீருடன் இரண்டு தேக்கரண்டி புளிக் கரைசல் சேர்த்து தேவையான உப்பு,மஞ்சள்பொடி சேர்த்து வேகவிட்டு, வடிகட்டி பிழிந்து வைத்துக் கொள்ளவும். 
  3. இரண்டு பருப்புகளையும்1/2 மணிநேரம் ஊறவைத்து,அத்துடன் மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும். 
  4. அதில்மஞ்சள்பொடி,பெருங்காயப்பொடி சேர்த்து நன்கு கலந்து, ஒரு தட்டில் அடை போல தட்டி வைத்து குக்கரில் வேகவிடவும். 
  5. வெந்ததை எடுத்து சற்று ஆறியதும் மிக்சியின் சின்ன கப்பில் போட்டு விப்பரில் ஒரு வினாடி சுற்றினால் நன்கு பூப்போல் உதிர்ந்து விடும்.
  6. வாணலியில் எண்ணை விட்டு, கடுகு தாளித்து அதில் உதிர்த்த பருப்பு,  வேகவிட்ட வாழைப்பூ சேர்த்து 10நிமிடம் கிளறவும். அடுப்பை சிறிதாக வைக்கவும்.
  7. அருமையான வாழைப்பூ உசிலி சாதத்துடன் பிசைந்தும், தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம். 

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்